விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
  அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 
  முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
  இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆள்வாய் - என்னை ஆளப்பிறந்தவனே;
முப்போதும் - மூன்று காலத்திலும்;
வானவர் - தேவர்கள்;
ஏத்தும் - ஸ்தோத்திரஞ்செய்கின்ற;
முனிவர்கள்  வெள்ளறை - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திருவெள்ளறையிலே;

விளக்க உரை

சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப்பெண்களோடே வலிவிற் சண்டையிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோவென்று அஞ்சி நீ ஓடிப்போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள். ஆள்வாய்! - என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு. முப்போது - இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.

English Translation

O Lord of Vellarai, my Lord, my ruler! Gods and seers worship you thrice a day. Copper-hued supple-breasted girls were playing in the sand. You broke their houses and snatched their food. So I became angry and scolded you. For that you have refused to eat your pudding. No, I will not do anything to you; come, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்