விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மதிள் - மதிளரணையுடைய
திருவெள்ளறை - திருவெள்ளறையிலே
நின்றாய் - நின்றருளினவனே!
மேல் - (என்) மேல்
ஒன்றும் - துன்பமும்

விளக்க உரை

பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ளவிடத்தில் வந்து சேர்ந்தபின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப்பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலையுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பேநின்று கொண்டு கன்றுகள் முலையூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக்கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச்சொல்லாகவுங் கொள்வர். நேசம் - ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.

English Translation

O Loveless One! I stand here calling you while all the cows have gone to the pen and wait bellowing. Do not stand at the crossroads at dusk. Look, my rods are well-meant. O Lord who stands in the walled city of Vellarai, come, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்