விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*
    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழியும் சங்கும் - சக்கரமும் சங்கமும்
கையன - திருக்கைகளிலுள்ளன;
ஏந்தி - (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு
நம்பர் - (இந்த) ஸ்வாமி
நம் இல்லம் புகுந்து நின்றார் - நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்;

விளக்க உரை

தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார். இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார். திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது. உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்றாளாயிற்று. கையன ஏந்தி கையிலுள்ளனவாக ஏந்தி என்று முரைக்கலாம். நம்பர் – எல்லாராலும் நம்பத்தகுந்தவர்; “நம்பும மேவும் நசையாகுமமே.” இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு ‘நம் இல்லம் புகுந்து நின்றா

English Translation

Wearing a bee-humming Tulasi garland over his shoulders, bearing a conch and discus in his hands, the trusted Lord entered our house. He looked like a god, exceedingly youthful and decent. His lips were the hue of red coral. His whole frame looked like a heap of corals. Aho, was he beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்