விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்*  காதுகள் வீங்கி எரியில்?* 
  தாரியா தாகில் தலை நொந்திடும் என்று*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?*
  சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்*  திரியவும் காண்டி* 
  ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட*  இருடிகேசா! என்தன் கண்ணே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காதுகள் - (என்னுடைய) காதுகள்;
வீங்கி - வீங்கிப்போய்;
எரியில் - எரிச்சலெடுத்தால்;
காரிகையார்க்கும் - (பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்;
உனக்கும் - (என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்;

விளக்க உரை

நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.

English Translation

O Hrishikesa, You say, “If my ears inflame, what is the difference between you and those girls?” Alas, I bored your ears without a thread fearing it might ache your head. It is my mistake. O Lord who

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்