விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்*  கடிகமழ் பூங்குழலார்கள்* 
    எண்ணத்துள் என்றும் இருந்து*  தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே* 
    உண்ணக் கனிகள் தருவன்*  கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்* 
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட*  பற்பநாபா இங்கே வாராய்    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலந்து - சேர்த்து;
எங்கும் - (அவர்களுடைய) வடிவம் முழுவதும்;
நோக்கி - பார்த்து;
கடி கமழ் - வாஸனை வீசுகின்ற;
பூ - புஷ்பங்களணிந்த;

விளக்க உரை

‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண்கலவியைச் சொல்லுகிறதென்க. கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும். பண்ணைக்கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி.

English Translation

O Padmanabha, Beautiful fragrant flower-coiffured dames look all over you with pleasant eyes and keep you in their hearts sweetly. O lord our ambrosia! You smote a cart to pieces. I will give you many

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்