விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீ வாய் வல் வினையார்*  உடன் நின்று சிறந்தவர்போல்* 
    மேவா வெம் நரகத்து இட*  உற்று விரைந்து வந்தார்*
    மூவா வானவர்தம் முதல்வா!*  மதி கோள் விடுத்த 
    தேவா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் - கொடிய
வினையார் - பாவங்கள்
சிறந்தவர் போல் - பந்துக்கள் போன்று
உடன் நின்று - என்னோடு பிரியாமல் கலந்துநின்று
மேவா வெம் நரகத்து இட உற்று - பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று

விளக்க உரை

இப்பாசுரத்தில் இரண்டாமடியில் நெடுநாளாகவே ஒரு பாடப்பிழை நேர்ந்துள்ளது; “மேவா வெந்நரகத்து இடருற்று என்றே பலரும் ஓதுவர்; இப்பாடம் பொருளற்றது; “இடவுற்று என்பது “இடருற்று“ எனப் பிழைபட்டது. (அடியேனை) மேவா வெம் நரகத்துஇட (நரகத்திலே தள்ள) உற்று விரைந்து வந்தார் என்கை. கீழ்ப்பாட்டில் “ஆறாவெந்நரகத்தடியேனை இடக்கருதி“ என்றாப்போலே. கீழ்ப்பாட்டில் ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) எழுவாய்; இப்பாட்டில் வல்வினையார் (பாபராசிகள்) எழுவாய். வல் என்ற அடைமொழி – அப்பாவங்கள் அவசியம் அநுபவித்தேதீரவேண்டுமவை என்பதைக் காட்டும். தீவாய் என்னும் அடைமொழி அவற்றின் கொடுமையைக் காட்டும். பலவகைத் துன்பங்கள் யுண்டுபண்ணுகின்றன வென்றபடி. சிறந்தவர் என்றது – உடன்பிறந்தோர் மக்கள் மனைவியர் முதலான உறவினரைச் சொன்னபடி. அவர்கள் ஒருகாலும் விட்டு நீங்காதவாறுபோல் இக்கொடிய பாவங்களும் எப்போதும் விட்டுப்பிரியாமலிருந்து கொண்டு என்னை நரகத்திலே தள்ளப்பார்க்கின்றனவென்றாராயிற்று

English Translation

O Lord residing in Tiruvinnagar! Pretending to be excellent friends, my wicked karmas only wall to send me to terrible hell. O, the first-cause Lord of gods, the three-gods-one! You rid the moon of his misery! I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்