விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் ஏய் நோக்கியர்தம்*  வயிற்றுக் குழியில் உழைக்கும்* 
    ஊன் ஏய் ஆக்கை தன்னை*  உதவாமை உணர்ந்து உணர்ந்து*
    வானே! மா நிலமே!*  வந்து வந்து என் மனத்து இருந்த 
    தேனே*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் ஏய் நோக்கியர்தம் - மானைப் போன்ற கண்ணழகையுடையரான ஸ்த்ரீகளினுடைய
வயிற்றுக் குழியில் - கர்ப்பக்குழியில் இருந்து கொண்டு
உழைக்கும் - கஷ்டப்படுமதாய்
ஊன் ஏய் - மாம்ஸாதிகள் நிறைந்ததான
ஆக்கை தன்னை - சரீரத்தினுடைய

விளக்க உரை

இந்த உடல் எப்படிப்பட்டது? ஸ்த்ரீகளின் கர்ப்பப்பையிலே கிடந்து படாதபாடுகளும் பட்டு “தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு முடல்” என்கிறபடியே மாம்ஸாதிகள் மலிந்து கிடப்பது; இப்படிப்பட்ட உடற்பிறவி நமக்குத் தகாதென்று நன்குணர்ந்தேன்; அது தொலைவதற்காக உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; திருவிண்ணகர் மேயவனே!. இரண்டாமடியில், “ஊனேயாக்கை”, “ஊனேராக்கை” என்பன பாடபேதங்கள். வானே! என்பதனால் நித்யவிபூதிநாதத்வமும், மாநிலமே! என்பதனால் லீலாவிபூதிநாதத்வமும் ஆக உபயவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டது.

English Translation

O Lord residing in Tiruvinnagar! O Sky! O Earth O Honey residing in my heart! Realising the futility of working for the pleasure of twon-eyed lurid dames, I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்