விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
    இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி
    அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
    வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புன் சொல் - (பிறர் சொல்லும்) அற்பமான வார்த்தைகளை
நெஞ்சில் - நெஞ்சிலே
பொறுத்தேன் - பொறுத்துக்கொண்டிருந்தேன்;
ஐம்புலன்கள் கடன் ஆயின - பஞ்சேந்திரியங்களுக்கும் கடமையாக ப்ராப்தமாயுள்ள
பொருள் இன்பம் என இரண்டும் - அர்த்தம், காமம் என்ற இரண்டையும்

விளக்க உரை

புன் சொல் நெஞ்சில் பொறுத்தேன் = இதற்கு இரண்டு படியாகப் பொருளுரைக்கலாம்; ஆபாஸ பந்துக்கள் பேரும்படியான இழிவான சொற்களையெல்லாம் தாங்கிக்கொண்டிருந்தேன் என்னுதல்; ஸமஸ்த கல்யாண குணநிதியாய்ச் செந்தாமரைக் கண்ணணாயிருக்கிற ஸர்வேச்வரனை ஸ்துதிக்க வேண்டடிய பாசுரங்களைக் கொண்டு நீசர்கள் ‘பனியிருங் குழலாளன்’ ‘சுந்தரத் தோள் படைத்தான்’ என்றிப்படி புகழ்ந்து கவிபாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக்கொண்டிருந்தேன் என்னுதல். முதற்சொன்ன பொருளின் கருத்து யாதெனில் – விபீஷணாழ்வான் ராவணனுக்கு ஹிதமான வார்த்தைகள் சொல்லச்செய்தேயும் அவன் அவற்றை மதியாமல் ‘த்வாம் துதிக் குலபாம்ஸநம்’ (இக்குலத்திற்கு இழுக்கான நீ ஒழிந்து போ) என்று திரஸ்கரித்து வார்த்தை சொல்ல, அதனால் நெஞ்சு புண்பட்ட விபீஷணன் ‘இனி நாம் இந்த பிராகிருதரோடு தான்; அப்படியே நானம் ஆபாஸபந்துக்களின் நீசபாஷணங்கள் செவியில் விழும்போதே அவர்களை வெறுத்தொழிந்து சடக்கென வந்து உன் திருவடிகளிலே விழ வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அது செய்யாதே நெடுநாள் வரையில் அந்த பிராகிருதர்களின் புன் சொற்களையெல்லாம் ஜுகுப்ஸையின்றி நெஞ்சிலே தாங்கிக் கொண்டிருந்தேனே! என்று பூர்வவ்ருத்தத்திற்கு அநுதாபப்படுகிறபடி.

English Translation

O Lord residing in Tiruvinnagar! I bore many insults, while feeding my senses with material goods and physical pleasurs. I took a vow to get rid of love and hate, and purged my heart of these. Now I have come to you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்