- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு* அரக்கர் தம் சிரங்களை உருட்டி*
கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்*
பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே.
காணொளி
பதவுரை
அன்று - முற்காலத்தில்
ஆ நிரை மேய்த்து - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்
அலை கடல் அடைத்திட்டு - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)
அரக்கர்தம் சிரங்களை உருட்டி - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்
விளக்க உரை
வரிவண்டு மிண்டி அங்கு தேன் இரைத்து உண்டு – அழகிய வண்டுகள் நெருங்கியிருந்து அவ்விடத்தில் மதுவை ஆரவாரத்தோடே பருகி இன் இசை முரலும் - மதுரமான இசைகளைப்பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளியங்குடி அதுவே.
English Translation
The Lord who then grazed cows, built a bridge on the ocean and killed all the Rakshasa, has the dark hue of rain-laden cloud is Krishna the Lord who resides in flower groves of Punnai, spilling their pearl buds, -Serund! trees harbouring bumble-bees drinking the nectar, singing in temple of iruvelliyangudi, that is it!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்