விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*
    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒருகால் ஆல் இலை வளர்ந்த - பிரளயகாலமாகிற ஒரு ஸமயத்தில் ஆலந்தளிரில் திருக்கண் வளர்ந்தருளினவனாயும்
பேய்ச்சியை முலை உண்டு - பூதனையினுடைய முலைப்பால் உண்டவனாயும்
இணை மருது இறுத்து - இரட்டை மருதமரங்களை முறிந்துவிழச் செய்தவனாயும்
பெரு நிலம் அளந்தவன் - விசாலமான பூமியை (த்ரிவிக்ரமனாய்) அளந்துகொண்டவனாயுமிருக்கிற

விளக்க உரை

ஐந்துலக்ஷங் குடிகள் நிறைந்த திருவாய்ப்பாடியிலே ‘என் வீட்டில் வெண்ணெய் போயிற்று, என் வீட்டில் நெய் போயிற்று’ என்றாற்போலே ஒவ்வொரு இடைச்சியும் கூவிக்கதறும்படி கவ்யங்களைக் களவாடி அமுதுசெய்தவனும், பிரளயங்கொள்ளாதபடி உலகங்களையெல்லாம் வயிற்றினுள்ளே அடக்கிவைத்து ஒரு சிற்றாலந்தளிரில் கண்வளர்ந்தவனும். தீயகருத்துடன் வந்த பூதனையை முலையுண்கிற வியாஜத்தாலே உயிர்முடித்தவனும், தவழ்நடையிலே யமளார்ஜுநங்களை முறித்துத்தள்ளினவனும், மஹாபலியாலே அபஹாரிக்கப்பட்டிருந்த பூமியை இரப்பாளனாய்ச்சென்று பெற்று அளந்துகொண்டவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம், திருவெள்ளியங்குடி. சுக்கிரன் தவம்புரிந்து பேறுபெற்ற தலமென்பதுபற்றி இத்தலத்திற்கு வெள்ளியங்குடியென்று திருநாமமாயிற்றென்பர்.

English Translation

The Lord who then stole the butter of cowherd-maids, lay in the wasters on a fig-free leaf, Drank Putana's breast, broke the twin Marudus took the whole Earth, now resides in Manni river's South, -flowing in plenty, -amid groves of Areca, bananas, Coconuts, everywehre around the temple of Tiruvelliyandi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்