விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
  விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
  பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
  மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பொருகாலத்தில்
முதுநீர்தடத்து - அகாதமான நீரை யுடைய பொய்கைக் கரையிலே
முதலை தனி  மா முரண் தீர - முதலையினுடைய மிகப் பெரிய துஷ்டத்தனம் தீரும்படியாகவும்
செம் கண் வேழம் உய்ய - சிவந்த கண்களையுடைய கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும்
விதலைத்தலை சென்று - (அவ்யானை) மிகவும் நடுங்கிக் கிடந்த ஸமயத்தில் எழுந்தருளி

விளக்க உரை

விதலைத் தலைச் சென்று - ‘விதலை’ என்று நடுக்கத்துக்குப் பெயர்; ‘நாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!” என்று அஞ்சி நடுங்கியிருந்தகாலத்தில் என்கை. வடமொழியில், ‘வி’ என்னுஞ் சொல் பக்ஷி யென்னும் பொருளது; பக்ஷிகளில் தலைவனை கருடனை ‘விதலை’ என்கிறது; விதலைத்தலை- கருடன்மேலே என்னவுமாம். (விண்ணைவு மித்யாதி) நகரச்சிறப்புக் கூறப்படுகின்றது; திருநாங்கூரில் மாடமாளிகைகள் விண்ணுலகளவும் ஓங்கியிருக்கின்றன: அவற்றில் புறாக்கள் உல்லாஸமாகக் கலந்திருக்கின்றன- என்கிறது. பதலையாவது - நுனியில் ஸ்தாபிக்கப்படும் கும்பங்கள். ‘கபோதம்” என்றவடசொல் மாடப் புறாவுக்கு வாசகமாயினும், அப்புறாக்கள் தங்கி வாழுமிடமாகிய ஸ்ந்நிவேசத்தையும் தமிழில் கபோதமென்றும் கபோதையென்றும் கபோதியென்றும் வ்யவஹரிப்பதுண்டு. கட்டிடத்தின் ஓர்பகுதி. “மதவலத்தலை-பிள்ளைத் தூண்களின்தலையிலே” என்பது வியாக்கியானம் அது தான் கொடுங்கை என்னலாம்.

English Translation

Then in the yore, the Lord came to the lake, --where the terrible crocodile had the red-eyed elephant in his jaws, --then and there helped the elephant in distress and took him into service. He resides in Nangur, where the Kalasa-topped mansions with pigeonholes rise sky-high, the softly-cooing coral-branch-like red-footed pigeons descend to the lower pillars and display their courtship. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்