விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
    எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*
    எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
    மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நந்தாவிளக்கே - ‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!
அளத்தற்கு அரியாய் - அளவிட முடியாதவனே!
நரநாரணனே - நரநாரயணாவதாரம் செய்தருளினவனே!
கரு மா முகில் போல் எந்தாய் - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே
எமக்கே அருளாய் என - எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி

விளக்க உரை

நந்தா விளக்கே! ஒரு நாளும் அணையாத விளக்கே! என்கை; (நந்துதல்-அழிதல்) ஒளியினாலே விளங்கும் பொருள் விளக்கு எனப்படும்; அதுபோல எம்பெருமான் நித்யமாய் ஸ்வயம்ப்ரகாசமான ஜ்ஞாநத்தைக் குணமாகவுடையனாயும் அப்படிப்பட்டஞானமே ஸ்வரூபமாகவுள்ள வனுயுமிருப்பது பற்றி நந்தாவிளக்கு எனப்பட்டான். அளத்தற்கு அரியாய் - அளவிட முடியாதவனே! என்கை. உலகத்திலுள்ள பொருள்களை மூன்றுவகைகளாலே அளவிடுதலுண்டு; அதாவது-காலத்தைக் கொண்டும், சேதத்தைக் கொண்டும், வஸ்துவைக் கொண்டும் அளவிடுதல்; இஃது எம்பெருமானிடத்தில் செய்யவொண்ணாது; எம்பெருமான் ஸர்வகாலத்திலு முள்ளவனாதலால் காலபரிச் சேதமில்லாதவன். ஸர்வ வ்யாபியாயிருப்பதால் தேச பரிச் சேதமில்லாதவன். அவனோடொத்த வஸ்த இல்லாமையினால் வஸ்து பரிச்சேதமில்லாதவன். இதுவே திரவியவரிவெஉராஹிதவம்; (த்ரிவித பரிச்சேதராஹித்யம்) என்று ஸ்ரீபாஷ்யாதிகளிற் கூறப்படும். இதுபற்றியே எம்பெருமானுக்கு அநந்தன் என்று திருநாமமாயிற்று.

English Translation

Celestials stand and call, “O Nanda-Villaku, lamp-eternal, hard-to-fathom, Namo-Narayana, dark cloud-hued Lord, grace-us!” He resided in Nangur where the bees fill the eight Quarters with their Devagandhari Raga while the bumble-bees follow their songs with shadow accompaniment. The Mandara trees spread fragrance everywhere. Offer worship in Manimodakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்