விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மூத்தவை காண*  முது மணற்குன்று ஏறிக்* 
  கூத்து உவந்து ஆடிக்*  குழலால் இசை பாடி* 
  வாய்த்த மறையோர் வணங்க*  இமையவர்- 
  ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மூத்தவை - வயசுசென்ற இடைச்சனங்கள்;
காண - காணும்படியாக;
முது மணல் குன்று ஏறி - நெடுநாளாய்க்கு விந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறியிருந்து;
வாய்த்த - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின;
மறையோர் - ப்ரஹ்மர்ஷிகன்;

விளக்க உரை

கண்ணபிரான் எல்லாருங் காணும்படியாக மிகவுமுயர்ந்ததொரு மணற்குன்றின் மேலேறிநின்று தான் விரும்பின பெண்களின் பேரைச் சொல்லுதலும் தன்மேல் கோபங்கொண்டிருக்கும் பெண்களின் காலைக்கையைப் பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி புல்லாங்குழலூதியும் நிலவறைகளிற் கிடக்கும் பெண்களும் அவ்விடத்தை விட்டோடிவந்து காண்கையாலே மிகவும் மனமுகந்து கூத்தாடியும் நிற்க அவனுடைய சேஷ்டிதரஸத்தை அனுபவித்து ரிஷிகளும் தேவர்களும் வணங்கித்துதிக்க இப்படிக் கூத்தாடின அழகோடே அப்பிரான்வந்து என்னைப்புறம்புல்க வேணுமென்பது - கருத்து. மூத்தவை - பலவின்பால் வினையாலனையும் பெயர்; மூத்த அவை எனறு பிரித்து பெயரெச்சத்து ஈற்று அகரம் தொக்கதென்றால் வயசுமுதிர்ந்துள்ள கூட்டமென்று பொருளாம். அவை = ‘ஸஹா’ என்ற வடசொல் ‘சபை’ எனத்திரிந்து அது ‘சவை’ என்றாய் சவை அவை ஆயிற்றென்ப. ‘வாய்ந்த மறையோர்’ என்ற தொடர் - (எதுகைக்கேற்ப) வாய்த்த மறையோர் என விகாரப்பட்டதென்றால் கண்ணன் யாவருங் காண முதுமணற்குன்றேறிக் குழலாலிசைபாடிக் கூத்து உவந்தாட மூத்த அவை - மூத்த ஸபையாய்த் திரண்ட இடையர்கள் இமையவர் - கண் இமையாதவர்களாயிருந்து ஏத்த - துதிக்கவும் வாய்த்த மறையோர் (நிலவறை ???) பொருந்திய மறைதலையுடைய பெண்கள் (குழலோசை வழியே கிட்டிக் கண்ணன் கூத்தாடுவதைக் கண்டு அவனது திருவடியின் ஸௌகுமார்யத்தை நினைத்து அக்கூத்தை நிறுத்துவதற்காக) வணங்கவும் இப்படிக் கூத்தாடின செவ்வியோடே வந்து என்னைப் புறம்புல்கவேணுமென்று பொருள் பணிக்க; அப்போது ஆடி - ஆட; எச்சத்திரிபு.

English Translation

My Lord and master came playing songs on his flute, climbed a tall sand tune and danced, watched by the elders of his clan, worshipped by the Vedic seers, and praised by the celestials. He will come and embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்