விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொத்த உரலைக் கவிழ்த்து*  அதன்மேல் ஏறி* 
    தித்தித்த பாலும்*  தடாவினில் வெண்ணெயும்*
    மெத்தத் திருவயிறு*  ஆர விழுங்கிய*
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆழியான் என்னைப் புறம்புல்குவான்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொத்த உரலை - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (க்கொண்டுவந்து);
கவிழ்த்து  - தலைகவிழ்த்துப்போட்டு;
அதன்மேல் ஏறி - அவ்வரவின் மேலேறி;
தடாவினில் - மிடாக்களிலேயள்ள;
தித்தித்த பாலும் - மதுரமான பாலையும்;

விளக்க உரை

திருவாய்ப்பாடியிலுள்ளார் தந்தம் தயிர் நெய் பால்களைக் கண்ணனுக் கெட்டாதபடி உயர உறிகளின் மேலே சேமித்துவைக்க அது கண்டு கண்ணபிரான் ஒரு பொத்தவுரலைத் தேடிக்கண்டுபிடித்து உருட்டிக் கொண்டு வந்து தலைகீழாகக் கவிழ்த்துப்போட்டு அதன்மேலேறி உறியையெட்டி அதிலுள்ளவற்றை விழுங்குவனாம் (பொத்தவுரலை) நல்வரவுலானால் அதை நடுவே யாரேனும் சிலர் கார்யார்த்தமாகத் தேடிவந்த தன்னைப் பிடித்துக் கொள்ளக் கூடுமென்று பொத்தவுலைத்தேடிப் பிடித்தானென்பது விசேஷார்த்தம். பொத்தவுரல் - ‘பொத்தலுரல்’ என்பதன் மரூஉ. வென்னலாம்; - பொத்தல் என்பதில் ஈற்றுமெய் கெட்டு தென்றலுமொன்று.

English Translation

My Lord overturns a mortar and stands on it, reaches up to the hanging pots of sweet milk and Ghee, and gorges himself to his fill. He will embrace me from behind, the discus-wielder will embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்