விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
  நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*
  தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
  என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேன்ஏய் - வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ் - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய் - ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து - இப்பெரிய பூமண்டலத்திலே

விளக்க உரை

நானே நாநாவித நரகம்புகும் பாவஞ்செய்தேன் = சேதநவர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப் போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்ளுகிறார். நாநாவித நரகம் = வடமொழித் தொடர். என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி. “தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலு மருளிச் செய்வர்.

English Translation

O Lord of Tiruvenkatam hills, surrounded by bee-humming flower groves! My Elephant! Caught in the lure of fawn-eyed dames, I stooped to commii all kinds of hell-going sins. Today I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்