விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
    நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
    வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
    நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நோய் பட்டு ஒழிந்தேன் - அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன் - நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால் - (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன் - உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;

விளக்க உரை

நாயேன் = நாய் போலே நீசன் என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணுகிறபடி. இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயல் நோக்கத்தக்கது. ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல்விழுந்து விரும்புமாபோலே ராஜாதிராஜனான நீயும் என்னை மேல் விழுந்து விரும்பவேண்டுமென்பது உள்ளுறை

English Translation

O Lord of Tiruvenkatam surrounded by Bamboo thickets and fragrant groves! Melting for Mother, Father, wife, relatives and friends I sickened and suffered. This dog-begone self has come with a desire to see you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்