திவ்யதேச பாசுரங்கள்

  3299.   
  நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
  ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 
  சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
  வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    

      விளக்கம்  


  • (நோற்ற நோன்பு) நோன்பு யன்று கர்மயோகத்தைச் சொல்லுகின்றது; தமக்குக் கர்மயோகமில்லையென்று சொல்லவேண்டில் ‘நோன்பிலேன்” என்றால் போதாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்னவேணுமோ? அதற்குக் கருத்து ஏன்? என்னில்; ஒருபடியாலும் நோன்பு இல்லை என்று சொல்லப்போகாது; யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்றாப்போலே சில ஸுக்ருத விசேஷங்கள் இல்லையென்னப்போமோ? “என் கைப்பாடாகச் செய்ததொரு கருமமில்லை” என்று சொல்லுவதே யுந்தமாதலால் நோன்புக்கு ‘நோற்ற’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது. நுண்ணறிலிவேன் = அறிவுக்கு நுண் என்று அடைமொழி கொடுத்ததன் கருத்து யாதெனில்; முந்நுற ஸ்வஸ்வரூபத்தையுணர்ந்து பிறகு பாஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பதாகிற நுட்பமான அறிவு இல்லாமையைச் சொன்னபடி. ஆகிலும் = என் கையிலே ஒரு நைம்முதலும் இல்லையாகிலும் என்றபடி, கர்மயோக ஜ்ஞானயோகங்களில்லாமை சொன்னது பக்தியோகமில்லாமை சொன்னபடிக்கும் உபலக்ஷணமாம். ** -தர்மநிஷ்டோஸ்மி க. சாத்மேவேதீ க பக்திமாந் த்வந் சரணாரலிந்தே” என்று ஆளவந்தாரருளிச் செய்த சந்தை இங்கு அநுஸந்தேயம்.


  3300.   
  அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
  எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 
  திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
  சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         

      விளக்கம்  


  • (அங்குற்றேனல்லேன்) பரமபத்திலுள்ளாரில் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன் என்கிறவிதற்குக் கருத்து என்னென்னில்; பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்கள் க்ருதக்ருத்யர்களாய்ப் பலன் கைபுகுந்தவர்களாகையாலே அன்னவர்களது வகுப்பிலே நான் சேர்ந்தவனல்லேன்; தம் தலையாலே ஸாதநாநுஷ்டகம் பண்ணிக்கிடக்கிற இந்நிலத்திலுள்ளார் வகுப்பிலும் சேர்ந்தவனல்லேன். இதுவரையிலும் ஒரு ஸாதனமும் அனுட்டியாமற் போனாலும் இனிமேலாவது ஸாதநாதுஷ்டானம் பண்ண யோக்யதையுண்டன்றோ என்னில்; (உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்) மேலும் ஸாதாரநுஷ்டானம் பண்ணவொண்ணாதபடி வடிவழகு முதலானவற்றிலே விடுபட்டு உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடக்கிறேனாகையாலே எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேன் என்கை. நீ இருக்குமிடத்தே வந்து கிட்டி உன்னை அநுபவிக்கிறவனல்லேன்; உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்; உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன் என்றுமாம்.


  3301.   
  கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
  பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*
  தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
  அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*

      விளக்கம்  


  • (கருளப்புட்கோடி.) கீழ்ப்பாட்டில் *சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே* என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். ‘ஆழ்வீர்!’ அருள் செய்யவேணுமென்கிறீர்; அப்படியே அருள் செய்வோம்; அதில் ஒரு குறையில்லை; ஆனால் நாம் அருள்செய்யவேணுமானால் உம்மிடத்தில் ஏதேனும் ஒரு கைம்முதல் இருக்கவேணுமே; அப்படி ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காணீர்’ என்ன, பிரானே! இனிமேல் நீ செய்கிற அருள் இருக்கட்டும்; இதுவரையில் உன் பக்கலில் நான் பெற்றிருக்கிற அருள் அபஸயிக்க முடியாததன்றோ; ஒரு வஸ்துவாக எண்ணத்தகுந்தவனல்லாதபடி யிருந்தவென்னை வஸ்துவாக்கி இவ்வளவு அதிகாரியாம்படி செய்தருளினாயே! இது என் பக்கலில் என்ன கைம்முதலைக் கண்டு? கீழ்க்காலத்தில் செய்த அருள் நீர்ஹேநுகமாயிருக்கத் தடையுண்டோ? இனி அருள் செய்கிறாய் செய்யாதொழிகிறாய்; அதில் விகாரமில்லை; இதுவரை நான் பெற்றிருக்கிற அருளுக்கு என்னிடத்தில் ஒரு கைம்முதலிருந்ததாக அறிகின்றிலேனே! என்கிறார். கருளப்புள்ளை (அதாவது, கருடபக்ஷியை)க் கொடியாகக் கொண்டு, அடியவர்கள் இருந்தவிடங்களிலே சென்று சாரியஞ் செய்வாய் நீ; சில ஸமயங்களில் “கருதுமிடம் பொருது- கைவந்த சக்கரத்தன்” என்கிறபடியே திருவாழியழ்வானைப் போகவிட்டு அடியவர்வினை கெடுப்பாய், திருநாட்டிலே சீரிய சிங்காசனத்திலேயெழுந்தருளியிருந்து நித்யமுக்தர்களுக்குக் காட்சி தந்தருளுமாபோலே எம்போல்வாரை வாழ்விக்க வேண்டிக் காளமேகத் திருவுருவத்தைக் காட்டுவாய்; இப்படியெல்லாம் உகரிந்தருளுமவனான நீ அபதார்த்தமாயிருந்தவென்னை ஒரு பதார்த்தாமக்கி இங்ஙனே வாசிகமான கைங்கரியத்தைப் பண்ண வல்லேனாம்படி அருள்புரிந்தாய்; திருநாட்டிலே நித்யமுக்தர்களுக்கு நித்யமுக்தர்களுக்கு நித்யமாக ஓலமுகங் கொடுத்துக்கொண்டிருக்கிற வண்ணமாக, வைதிகர்கள் நிறைந்த வானமாமலைப்பதியிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பிரானே! நீ இவ்வளவாக உபகரித்து நின்றவிதுக்கு என் தலையில் ஒரு கைம்முதல் இருந்ததாக அறிகின்றிலேன் என்றாராயிற்று.


  3302.   
  மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
  நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 
  தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
  ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    

      விளக்கம்  


  • (மாறுசேர்படை) அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார். “***- ஸமஹம் ஸர்வபூதேஷுமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியர்!” என்றிருக்கிற பகவானுக்கு ஒருவரையும் பகைவராகச் சொல்லக்கூடாதாயிருக்க, “மாறுசேர்படை நூற்றுவார்” என்று சொல்லலாமோவென்னில், ஆச்ரித விரோதிகளைத் தன் விரோதிகளாக எம்பெருமான் நினைப்பவனாதலாலும், அது தோன்ற “*** -த்விஷதர்கம் ந போந்தவ்யம் த்விஷந்தம் ஸகவ போஜயேத், பாண்டவாந் த்விஷனே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று தானே அருளிச் செய்திருக்கையாலும் சொல்லத் தட்டில்லை.


  3303.   
  எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
  கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*
  செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
  கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.

      விளக்கம்  


  • (எய்தக்கூவுதல்.) கீழ்ப்பாட்டில் “உன்னை யெங்கெய்தக் கூவுவனே!” என்ற ஆõ“வாரைநோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ஒன்றும் பெறாதவர்போலே கூப்பிடாநின்றீரரே; சிரீவரமங்கல நகரிலிருப்பை உமக்குக் காட்டித் தரவில்லையோ நான்?” என்றருளிச்செய்ய, அதற்கு ஆழ்வார், அது இல்லையென்று நான் சொன்னேனோ? அவ்வளவால் த்ருப்தி பிறக்கவில்லையே! என்கிறார். எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே!= என்னைப் பெறுவதற்கு நீ முயற்சி பண்ணவேண்டியிருக்க, உன்னைப் பெறுவதற்கு நான் முயற்சி பண்ணவேண்டும் படியாவதே! இது தகுதியோ? என்றவாறு. சேதநலாபம் எம்பெருமானுக்கா? எம்பெருமானுடைய லாபம் சேதநனுக்கா? என்று பார்க்குமளவில், சேதாலாபம் ஈச்வரனுக்கு என்பது சாஸ்த்ரார்த்தமாகத் தேறி நிற்கும். தன்னுடைய ஸொத்துக் கைதவறிப்போனால் அதைப் பெறுதற்கு ஸ்வாமியானவன் முயல வேண்டியிருக்குமேயல்லது, ஸொத்து ஸ்வாமியைப் பெறுதற்கு முயல்வதென்பது கிடையாது; இது இங்கே தலைகீழாயிற்று! என்கிறார். எவ்வதெவ்வத்துளாயுமாய் நின்ற கைதவங்கள் செய்யும் அம்மானே! தெய்வமென்று சத்ருஸமுஹத்திற்குப் பெயர்; “தெவ்வர் அஞ்ச நெடும்புரிசையுயர்ந்த பாங்கர்” என்று குலசேகராழ்வாருடைய பிரயோகமும் காண்க, ‘எல்ல’ என்றது எப்படிப்பட்ட என்றபடி, எவ்வகைப்பட்ட சத்ரு ஸமுஹத்தினுள்ளும் புகுந்து க்ருத்ரிமங்களைச் செய்யும் பிரானே! இங்கே ஈடு- “புத்தமுரியாய் அவர்கள் நடுவே புக்குநின்று அவர்களுக்குண்டான வைதிகச்ரத்தையைப் போக்கினபடி. (கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே!) வசுகங்களாம் யுக்திகளாலும் க்ருத்ரிமத்தைப்பண்ணி வைதிக ச்ரத்தையைப் போக்கி அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மானப் பண்ணினபடி. தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களை “வப்ஙராயராக்கி ஒருவனம்புக்கிலக்காம்படி பண்ணிவைத்தான்.”


  3304.   
  ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
  வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*
  தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
  வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    

      விளக்கம்  


  • (ஏனமாய் நிலங்கண்ட.) நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார். பிரளயத்துக்குள்ளான பூமியை வராஹருக்கொண்டு எடுத்தாப்போலே ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே “ஆவாரார் துணையென்று அலைநீர்கடலுளழுந்தும் நாவாய்போல், பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க” என்கிறபடியே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளவேணுமென்னும் கருத்துப்படி “ஏனமாய் நிலங்கீண்டவென்னப்பனே!” என்கிறார். கண்ணா! = “வம்ச பூமிகளை உத்தரிக்கக் கீழ்க்குலம்புக்க வராஹ கோபலரைப்போலே” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தி இங்கே நினைக்கத்தக்கது. நிமக்கரையுயர்த்துவதற்காகவே யன்றோ நீ வராஹரூபியாயுத் கோபாலமூர்த்தியாயும் தாழவிழிந்தது; அப்படிப்பட்ட நீ என்னையும் உயரத் தூக்க வேண்டாவோ என்பது உள்ளுறை. என்றும் என்னையாறுடை வானநாயகனே! = நீ வானநாயகனாயிருக்கும்போதும் (அதாவது, பரம பதத்திலே யெழுந்தருளியிருக்கும்போதும்) என்னை ஆட்கொள்ளும்படியையன்றோ ஆராய்ந்து போருவது! என்ற கருத்துக்காண்க.


  3305.   
  வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
  முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 
  செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
  அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       

      விளக்கம்  


  • (வந்தருளி.) கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதாரஸாமதியைக் குலைத்துக் கொண்டு கிரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார். பாசுரம் தொடங்கும்போதே ‘வந்தருளி’ என்றிருக்கின்றபடியாலே உபேக்ஷித்தானென்று நினைப்பது எங்ஙனே பொருந்தும்; என்னில்; கீழ்ப்பாட்டிலே அபேக்ஷித்தபடியே வந்தருளினபடியைச் சொல்லுகிறதன்று இது, “வடதடமும் வைகுந்தமும் மதிள்நுவாரபதியும் இடவகைகளிகழ்ந்திட்ட என் பாலிடவகை கொண்டனையே” என்னுமாபோலே பரமபதம் முதலானவிடங்களைவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து குடிகொண்டிருக்கிறபடியைச் சொன்னவித்தனை. “வந்தருளி யென்னஞ்சிடங்கொண்ட” என்கிறவிடத்திலே நம் பிள்ளையிட்டு ஹஸூதிபரமபோக்யமானது. அது வருமாறு:- “பட்டர் ஸ்ரீபுஷ்பயாகம் அணிந்தானவாறே நஞ்சயரைப் பலகாலும் இயல்கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரைவிட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லுமென்று ஜீயரை அருளிச்செய்து தாம் இத்தை அதுஸந்திருந்து அநநிதரத்தே தாமும் இப்பாட்டை இயல்சொல்லி ‘யமநிதமாதி க்ரமத்தாலே யெவ்ய வஸ்துவை மநநம் பண்ணிப் புறம்புள்ள பராக்வகயறுத்து அநஸந்திக்கப்புக்காலும் அக்காள் பால்போலேயிருக்கக் கடவ நெஞ்சுகள் பதஞ்செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!” என்றருளிச் செய்தார்; நஞ்சீயர் இவ்வார்த்தையை உருத்தோறு மருளிச்செய்வர் என்றருளிச்செய்வர்.”


  3306.   
  அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
  அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 
  பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
  புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    

      விளக்கம்  


  • (அகற்ற நீவைத்த) கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்க விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார். அர்த்த பஞ்சக ஜ்ஞானத்திலே விரோதி ஜ்ஞானமும் ஒன்றாயிருக்கும்; அஃது உண்டானபடி இப்பாட்டின் முன்னடிகளிலே சொல்லிற்றாகிறது. கீதையிலே “***- மம மாயா துரத்யயா.” என்று, நான் நினைத்தபிணை ஒருவரால் அவிழ்த்துக்கொள்ளப் போகாது என்று சொல்லிவைத்தபடியே நீ பிணைத்த பிணைக்குத் தப்பிப் பிழைத்தாருண்டோ? ஐந்து இந்திரியங்களையும் அவற்றுக்கு உணவான ஐந்து விஷயங்களையும் பிணைத்துவைத்து இவற்றின் நடுவே என்னை இருந்தினாயே! இது அகற்றுவதற்கு இட்டவழியோ? அன்றி அணுகுவதற்கு இட்டவழியோ? உன்னை உகவாதார் அகன்றுபோம்படிக் கீடாக நீ வைத்தவை இவை என்று நான் நன்றாக அறிந்துகொண்டேன். *மயர்வறமதிநலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தேன்.


  3307.   
  புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
  கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*
  தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
  யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  

      விளக்கம்  


  • (புள்ளின்வாய் பிளந்தாய்.) கீழ்ப்பாட்டில் “அகற்றியென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக்கேட்ட எம்பெருமான்,‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணாமக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிறவுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார். புள்ளின்வாய் பிளந்ததும் மருதிடை போனதும் எருதேழடர்த்ததும் க்ருஷ்ணாதாரத்திலே. பகாஸுரனிற்காட்டிலும் வலிதோ என் வினை? இரட்டை மருதமரங்களில் ஆவேசித்துக்கிடந்த அசுரரிற்காட்டிலும் வலிதோ என் வினை? நப்பின்னைப்பிராட்டியின் திருமணத்திற்கு இடையூறாய் நின்ற எருதுகளிற் நாட்டிலும் வலிதோ என் வினை? கருமாணிக்கச்சுடரே! என்பது திருமேனி யொளியில் ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தை. புள்ளின் வாய்பிளந்தது முதலிய செயல்கள் திருமேனியை ஆயாஸப்படுத்திச் செய்தவனவாகும்; அப்படி ஏதேனும் ஆயாஸப்படவேணுமோ என் வினைகளைப் போக்க? என்பது உள்ளுறை-,


  3308.   
  ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
  மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*
  சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
  நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.

      விளக்கம்  


  • (ஆறெனக்கு.) ஏற்கனவே தமக்குக் கிடைத்திருக்கிற அத்யவஸாப விசேஷத்திற்கு க்ருதஜ்ஞதாநுஸந்தாகம் பண்ணுகிறாரிப்பாட்டில். ஆறு என்று வழிக்குப் பெயர்; அதாவது உபாயத்தைச் சொன்னபடி. மேலே, சாணாக என்ற விடத்தில் சரண் என்ற சொல் ‘சரண்யம்’ என்ற வடசொல்லின் விகாரமாய் உபேயத்தைச் சொல்லிற்றாகும். ஆக, “எனக்கு நின் பாதமே ஆறு சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அந்வயித்து “ப்ராப்ய ப்ராபாங்களிரண்டும் உன் திருவடி மலர்களே யென்றிருக்கும் இவத்யவஸாதயத்தை எனக்கு ஸ்வபாவமாம்படி தந்தருளினாய்” என்றருளிச் செய்வர் பிள்ளான். பட்டர், ஆறு என்பதற்கும் சரண் என்பதற்கும் உபாயமென்கிற பொருளையே கொள்வர். உபாயப் பொருளதான சரணம் என்கிற வடசொல் சரணென்று திரிந்ததாகக் கொண்டபடி. உபாயமென்னும் பொருளிலே இரண்டு சொற்கள் கிடந்தனவாகில் எங்ஙனே அர்வயிக்கிறதென்னில்; பதவுரையிற் காண்க.


  3309.   
  தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
  கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*
  செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
  வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   

      விளக்கம்  


  • (தெய்வநாயகன்.) இத்திருவாய்மொழியைக் கற்குமவர்கள் நித்யஸூரிகளுக்கும் ரெமபோக்யராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ஸரிவேச்வரனாய் ஆச்ரிதவத்ஸலனாய் தன்னுடைய பெறுகைக்குத் தான் அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவனான எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வார் ஸமர்ப்பித்த இத்திருவாய்மொழிளைக் கருத்தறிந்து பாடவல்லவர்கள் காலதத்துவமுள்ளதனையும் நித்தியஸூரிகளுக்குப் பரமபோக்யர்களாக ஆகப்பெறுவரென்றதாயிற்று.