திவ்யதேச பாசுரங்கள்
-
391.
தங்கை மூக்கைத் தடிந்த விவரணமும், அதன்மேல் தோன்றும் ஆக்ஷேபத்திற்குப் பரிகாரமும், கீழ்- என்னாதன் தேவியில் எட்டாம்பாட்டினுரையில் கூறப்பட்டது. தாசரதி- வடமொழித் தத்திதாந்தநாம்.(எங்குத் தன் புகழா இத்யாதி.) ***-***-***- என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கது. புருடோத்தமன்- திருக்கண்டங்கடிகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம். இருக்கை- தொழிலாகுபெயர். பின்னடிகளின் கருத்து;- ஏதேனுமொரு குளத்தில் நீராடுமவர்கள் அந்த நீரைக் கங்கையாக நினைத்து, ‘கஙகை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பெருப்பெருத்த பாபங்களையெல்லா மொழிக்கும்படியான பெருமை பொருந்திய கங்கையின் கரையிலுள்ள கண்டமென்கிற நகரவிசேஷமென்பதாம். திருகண்டங்கடிநகர்- வடநாட்டுத் திருப்பதிகள் பரிரண்டினுள் ஒன்று; கண்டம் என்னுமிவ்வளவே இத்திருப்பதியின் பெயர்; கடி. என்னுஞ்சொல் இங்குச் சிறப்புப் பொருளது. “மத்தாற் கடல் கடைந்து வானோர்க்கமுதளித்த அத்தா வெனகுன்னடிப்போதில்- புத்தமுதைக், கங்கைக் கரைசேருங் கண்டத்தாய் புண்டரிக, மங்கைக்கரசே வழங்கு” என்ற ஐயங்கார் பாடலில் “கண்டத்தாய்” என்ற விளி நோக்கத்தக்கது.
எம்பெருமான் மாவலி கையில நீரேற்றுப் பெற்று உலகளக்கத் தொடங்கி ஓங்கியுயர்ந்தபோது சந்த்ரஸூர்யர்கள் இதுவென் புகுந்த்திங்கந்தோ என்றாற்போல அஞ்சினராம்; அப்படி அவர்கள் அஞ்சும்படி விம்மி வளர்ந்த எம்பெருமான் பொருந்தி யெழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னும் கடிநகரென்க. சந்திரன் அம்ருதமயமான கிரணங்களையுடையவனாதலால், சலம்பொதியுடம்பின்னாக்க் கூறப்படுதல். பேழ்-பெருமை. “சலம்பொதியுடம்பிற் சந்திரன், தழலுமிழ்பேழ்வாய் வெங்கதிர்” என இயைந்துரைக்கப்பட்டது. பின் ஒன்றவாயடிகளால், கங்கையை வருணிக்கின்றார். இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் பெருகிப்பின்பு சங்கரன் சடையினில் தங்கி, ஆகாசத்தில் நின்றும் நிலவுலகத்தில் பிரவஹித்தமையால், எம்பெருமானுடைய பாத்த்துழாய்மலரோடும் சிவபிரானுடைய முடிக் கொன்றைமலரோடுங்கலந்து பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் விலுக்ஷணமானதொரு புகரைப்பெறுமென்க. “கலந்திடும்” என்பதைச் சடையோடும் இயைக்கலாம், சடையனோடும் இயக்கலாம். எம்பெருமானுடைய ஸ்ரீபாத்தீர்த்த்த்தைத் தனக்குத் தூய்மை விளைக்குமதாக ப்ரதிபத்திபண்ணித் தலையால் தரிக்கைக்கு மேற்பட்ட நன்மையில்லையிறே சடையானுக்கு.
திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற்சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விலக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்கை நதியை, ஸூர்யகுலத்துப் பகிருத சக்ரவர்த்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகா புத்திரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்கு கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான் அந்நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாக பூமியில் விட்டனன் என்ற வரலாறு அறியத்தக்கது. ஓங்கி உலகளந்தருளும்போது நமுசி முதலிய அசுரர்கள் “என்னிதுமாயமென்னப்பனறிந்திலன், முன்னைவண்ணமே கொண்டவளவாய்” என்று தடை செய்ய, அப்போது சங்கை முழங்கியும், ஆழியை எறிந்தும் அவர்களைத் தொலைத்தருளினமை முன்னடிகளில் கூறியது. “குமிழ்த்தி” “எறிந்து” என்ற வினையெச்சமிரண்டும், “இடம்” என்ற பெயரெச்சத்தோடு இயையும், இம்முன்னடிகளிற் கூறிய வரலாறு, ஸாதாரணாமகத் தேவாஸுரயுதத்த காலங்களில் நடந்ததாகக் கொள்ளவுங்கூடும். “தலைகளையிடறும்” என்றது அவர்களைத் தொலைத்தமையைக் கூறியவாறு.
அரசுரர்களு மரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களைக் குடியிருக்கவோட்டாதபடி அனைத்து அடர்ந்து எதிர்த்து போர்புரியப்புக, அப்போது எம்பெருõமன் இந்திராதிகளுக்குப் பக்ஷபாதிபதியாயிருந்து அவர்களை இடையூறின்றி அரசான்விக்குமாறு அவ்வசுரர்மீது தனது கந்தகவாளைவீசியெறிந்து அவர்களைப் பொழிந்தமை முன்னடிகளிற்கூறியது. இறுமாந்திருக்கையாவது கண்டவாற்றால் தனதேயுலகென நின்றாறன்னை என்றாற்போல வீற்றிருக்கை. அரசான் நாந்தகம்விசிறு என இயையும். ஏற்றுவந்து என்று வந்து அஹங்கரித்து வந்து, நாந்தகம் நீட்டல் விகாரம், நகர்தான் - தான் அசை. இமவந்தக தொடங்கியிருங்கடலளவும் என்பது வடசொல்வழக்கு. ஹிமகத்பர்வத்த்தின் உச்சிதொடங்கி பெரியகடலளவும் இகண்டுவரையிலுள்ள லோகத்தாருந் திரண்டு ஆரவாரித்துக்கொண்டு வந்து நீராட, அவர்களுடைய பரபங்களையெல்லாம் பொறுத்து அவர்களைத் தூயரக்கும் பெருமையைவுடையது கங்கையென்க கமை என்ற வடசொல்திரியு, “கமை பெருமை உடை“ எனமாற்றி இயைத்து, (பாவங்களை) க்ஷமிக்கையாகிற பெருமையையுடைய என்றுரைப்பாருமுளர்.
கலப்பையும் உலக்கையும்- பலராமாவதாரத்திலும், மழு- பரசுராமாவதாரத்திலும் கொள்ளப்பட்ட ஆயுதங்களென்க. படைக்கலமுடைய= படைகலம், உடைய என்று பிரித்து, (இவற்றை) ஆயுதமாகவும் ஆபரணாமகவுமுடைய என்று முரைக்கலாம். அநேக ஜந்மஸஞ்சிதமான பாவங்களைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் கழித்து விடும்படியான பெருமையையுடையது கங்கையென்பது பின்னடி. கழுவிடும்- கழுவியிடும்
ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் அடைவே, பூ:பஙல், ஸுவ: என்ற மூன்று வயாஹ்ருதிகளையும் தோன்றுவித்து, பொன்வாணியன் பொன்னைப் புடபாகம் வைப்பதுபோல எம்பெருõமன் தனது ஸங்கல்பத்தினால் அவற்றை ஓடவைத்து, அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற மூன்று அக்ஷரங்களைத் தோன்றுவித்து, அம்மூன்றையும் ஸந்தி கிராமத்தில் ‘ஓம்’ என்று ஏகாக்ஷரமாக்கி இப்படி ஏகாக்ஷரமாக்கப்பட்ட மூன்றக்ஷமாகிய பிரணவத்தை நிருத்திக்ரமத்தினால் (அதாவது- ப்ரக்ரியை பண்ணும் மூன்றுபதமாய் மூன்று அர்த்தங்களுக்கு வாசகமாயிருக்கும் அகார உகார மகாரங்களாகிய மூன்றெழுத்தாகப் பிரித்து அவற்றுள் அகாரம் ஜீவாத்துமாவுக்குள் பகவச்சேஷத்துவத்தைக் கூறுகை. யாலும், உகரம் அவதாரணாத்தத்தைக்கூறி, அதனால் கீழ்ச்சொன்ன சேஷத்துவம் ஸ்ரீமந்நாராணன் பக்கலிலன்றி வேறுடத்து வஹிக்கத்தகாதது என்று மிடத்தைத் தெளிவிக்கையாலும், மகாரம் “மக-ஜ்ஞாநே” என்கிற தாதுவினின்றும் பிறந்து ஞாலத்தைக் கூறுமதாயும், அநந்யார்ஹ சேஷத்வத்துக்கா ஆசரயமான ஆத்துமா தேஹம் முதலியவற்றிற்காட்டில் விலக்ஷணன் என்று புலப்படுத்துமதாயு மிருப்பதாலும், இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து அநுஸந்திருக்குமலர் பக்கலில் பரமகிருபையைச் செய்தருள் பலனும், அந்தப்ரணவத்தை நம பத நாராண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களையும் தோன்றுவித்து, அவ்வாகாரங்களுக்கு எதிர்த்தட்டாகத்தான் சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்பயத்வம் என்கிற மூன்று ஆகாரங்களையுடையது எம்பெருமாள் எழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னுங் கடிநகராம். மூன்றெழுத்தனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி” - பிரித்துப் பார்த்தால் மூன்றெழுத்தாகத் தோன்றும்படியாய், ஸ்தூலதர்சநத்தில் ஏகாக்ஷமாகத் தோற்றும்படியாயுள்ள ‘ஓம்’ என்கிற பிரணவத்தை நிர்வாசக்ரமத்தினால் மூன்றெழுத்தாகப் பிரித்து என்றபடி. என்ற ஸ்ரீரங்கராஜன் தவஸூக்தியின்படி நிர்வசநத்துக்கு வசநமாவது- என்கிற சுதி என்ற சொல் அக்ஷாத்ரயாத்மகமானது பற்றி ‘மூன்றெழுத்ததனால்’ என்றாரென்க. நிருக்தம்- வேதாங்கங்கள் ஆறனுள் ஒன்று. மூன்றாமடியில், தோன்றி- பிறவினையில் வந்த தன்வினை.
முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப்பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டது. சலசல - ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர். பின்னடிகளின் கருத்து; - தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத்ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து, அத்திமதிநத்தில் அவப்ருத ஸ்தாகஞ்செய்ய, அநந்தரம் பெருக்காறாப்பெருக்கி யாகபூமிலுள்ள கலப்பை முதலிய உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத்தள்ளிக்கொண்டு போகாநிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம். அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாகம்;
எவ்வகையினாலாவது கண்ணபிரானை கலிய நினைத்த கம்ஸன் தான் ஒரு தநுர்பாகஞ்செய்வதாக அதற்கு அப்பிரானை உறவுமுறையாமையால் அழைக்க, அவ்வண்ணமே கண்ணபிரான் அங்கேற எழுந்தருளிச் செய்த செயல்களைக் கூறுவது,
விளக்கம்
392.
விளக்கம்
393.
விளக்கம்
401.
விளக்கம்
394.
விளக்கம்
395.
விளக்கம்
400.
விளக்கம்
396.
விளக்கம்
397.