2 எண்ணிக்கை பாடல் பாட
திருக்கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* - செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன்* புரி சங்கம் கைக்கண்டேன்,*
என்ஆழி வண்ணன்பால் இன்று (2)
பண்டுஎல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,*
கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு
வளம்கிளரும் நீள்சோலை* வண்பூங் கடிகை,*
இளங்குமரன் தன் விண்ணகர். (2)
தொட்ட படைஎட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்ச* குறித்துஎறிந்த சக்கரத்தான்*
தாள்முதலே நங்கட்குச் சார்வு (2)