2 எண்ணிக்கை பாடல் பாட

தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்* 
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!* 
உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்* 
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)    

கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்*  கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற* 
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த*  மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று* 
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்*  விண்ணவர் கோன் அடி நண்ணுவரே* (2) 

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற*  நாராயணா நரனே*  உன்னை- 
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்*  எமக்கு வாதை தவிருமே* 
காமன் போதரு காலம் என்று*  பங்குனி நாள் கடை பாரித்தோம்* 
தீமை செய்யும் சிரீதரா!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* (2)

சீதைவாய் அமுதம் உண்டாய்!*  எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று* 
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச்சொல்லை* 
வேதவாய்த் தொழிலார்கள் வாழ்*  வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்* 
கோதை வாய்த் தமிழ் வல்லவர்*  குறைவின்றி வைகுந்தம் சேர்வரே* (2) 

கோழி யழைப்பதன் முன்னம்*  குடைந்து நீராடுவான் போந்தோம்* 
ஆழியஞ் செல்வன் எழுந்தான்*  அரவணை மேல்பள்ளி கொண்டாய்* 
ஏழைமை யாற்றவும் பட்டோம்*  இனி என்றும் பொய்கைக்கு வாரோம்* 
தோழியும் நானும் தொழுதோம்*  துகிலைப் பணித்து அருளாயே* (2)

கன்னியரோடு எங்கள் நம்பி*  கரிய பிரான் விளையாட்டைப்* 
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த*  புதுவையர்கோன் பட்டன் கோதை* 
இன்னிசையால் சொன்ன மாலை*  ஈரைந்தும் வல்லவர் தாம் போய்* 
மன்னிய மாதவனோடு*  வைகுந்தம் புக்கு இருப்பாரே*. (2)       

தெள்ளியார் பலர்* கைதொழும் தேவனார்* 
வள்ளல்*  மாலிருஞ்சோலை மணாளனார்* 
பள்ளி கொள்ளும் இடத்து*  அடி கொட்டிடக்* 
கொள்ளுமாகில்*  நீ கூடிடு கூடலே!*  (2)       

காட்டில் வேங்கடம்*  கண்ணபுர நகர்* 
வாட்டம் இன்றி*  மகிழ்ந்து உறை வாமனன்* 
ஓட்டரா வந்து*  என் கைப் பற்றித் தன்னொடும்* 
கூட்டு மாகில்*  நீ கூடிடு கூடலே!* (2)

ஊடல் கூடல்*  உணர்தல் புணர்தலை* 
நீடு நின்ற*  நிறை புகழ் ஆய்ச்சியர்* 
கூடலைக்*  குழற் கோதை முன் கூறிய* 
பாடல் பத்தும் வல்லார்க்கு*  இல்லை பாவமே* (2)          

மன்னு பெரும்புகழ் மாதவன்*  மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை 
உகந்தது காரண மாக*  என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே?* 
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்*  பொதும்பினில் வாழும் குயிலே!* 
பன்னி எப்போதும் இருந்து விரைந்து*  என் பவளவாயன் வரக் கூவாய்*. (2)   

மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்*  வில்லிபுத்தூர் உறைவான் தன்* 
பொன்னடி காண்பதோர் ஆசையினால்*   என் பொ ருகயற் கண்ணிணை துஞ்சா* 
இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் கோலக்கிளியை* 
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!*  உலகளந்தான் வரக் கூவாய்*. (2)

விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை*  வேற் கண் மடந்தை விரும்பி* 
கண்ணுற என்கடல் வண்ணனைக் கூவு*  கருங்குயிலே! என்ற மாற்றம்* 
பண்ணுற நான்மறையோர் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் கோதை சொன்ன* 
நண்ணுறு வாசக மாலை வல்லார்*  நமோ நாராயணாய வென்பாரே!* (2)

வாரண மாயிரம்*  சூழ வலம் செய்து* 
நாரண நம்பி*  நடக்கின்றான் என்றூ எதிர்* 
பூரண பொற்குடம்*  வைத்துப் புறமெங்கும்* 
தோரணம் நாட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்* (2)

ஆயனுக்காகத்*  தான் கண்ட கனாவினை* 
வேயர் புகழ்*  வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்* 
தூய தமிழ்மாலை*  ஈரைந்தும் வல்லவர்* 
வாயும் நன் மக்களைப் பெற்று*  மகிழ்வரே* (2)

கருப்பூரம் நாறுமோ?* கமலப் பூ நாறுமோ* 
திருப் பவளச் செவ்வாய்தான்*  தித்தித்திருக்குமோ* 
மருப்பு ஒசித்த மாதவன் தன்*  வாய்ச்சுவையும் நாற்றமும்* 
விருப்புற்றுக் கேட்கின்றேன்*  சொல் ஆழி வெண்சங்கே!* (2) 

பாஞ்சசன்னியத்தைப்*  பற்பநாபனோடும்* 
வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய*  வண்புதுவை* 
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான்*  கோதை தமிழ் ஈரைந்தும்*
ஆய்ந்து ஏத்த வல்லார்*  அவரும் அணுக்கரே*. (2)   

விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்*  துளி சோரச் சோர்வேனைப்* 
பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   

சங்க மா கடல் கடைந்தான்*  தண் முகில்காள்!* வேங்கடத்துச்- 
செங்கண் மால் சேவடிக் கீழ்*  அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 
கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து* 
ஒருநாள் தங்குமேல் என் ஆவி*  தங்கும் என்று உரையீரே* (2)       

மத யானை போல் எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்தைப்- 
பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பு அணையான் வார்த்தை என்னே* 
கதி என்றும் தான் ஆவான்*  கருதாது*  ஓர் பெண்கொடியை-
வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே* (2)    

நாகத்தின் அணையானை*  நன்னுதலாள் நயந்து உரை செய்* 
மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்* 
போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதை தமிழ்* 
ஆகத்து வைத்து உரைப்பார் *  அவர் அடியார் ஆகுவரே* (2)

சிந்துரச் செம்பொடிப் போல்*  திருமாலிருஞ்சோலை எங்கும்* 
இந்திர கோபங்களே*  எழுந்தும் பரந்திட்டனவால்* 
மந்தரம் நாட்டி அன்று*  மதுரக் கொழுஞ்சாறு கொண்ட* 
சுந்தரத்தோளுடையான்*  சுழலையினின்று உய்துங் கொலோ!* (2)    

நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*  நான்- 
நூறு தடாவில் வெண்ணெய்*  வாய்நேர்ந்து பராவி வைத்தேன்* 
நூறு தடா நிறைந்த*  அக்கார அடிசில் சொன்னேன்* 
ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!* (2)        

சந்தொடு காரகிலும் சுமந்து*  தடங்கள் பொருது* 
வந்திழியும் சிலம்பாறு*  உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச்*
சுரும்பு ஆர் குழற் கோதை*  தொகுத்து உரைத்த* 
செந்தமிழ் பத்தும் வல்லார்*  திருமாலடி சேர்வர்களே* (2)     

கார்க்கோடற் பூக்காள்!*  கார்க்கடல் வண்ணன் என்மேல்*  உம்மைப்- 
போர்க் கோலம் செய்து*  போர விடுத்தவன் எங்கு உற்றான்?* 
ஆர்க்கோ இனி நாம்*  பூசல் இடுவது?*  அணி துழாய்த்- 
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப்*  படைக்க வல்லேன் அந்தோ!*  (2)    

நல்ல என் தோழி!*  நாகணைமிசை நம்பரர்* 
செல்வர் பெரியர்*  சிறு மானிடவர் நாம் செய்வதென்?* 
வில்லி புதுவை*  விட்டுசித்தர் தங்கள் தேவரை* 
வல்ல பரிசு வருவிப்பரேல்*  அது காண்டுமே*  (2) 

தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  

பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 
செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)

பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)      

செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2)   

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*  மாதவன் என்பது ஓர் அன்புதன்னை* 
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்*  ஊமையரோடு செவிடர் வார்த்தை* 
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்*  பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி* 
மற் பொருந்தாமற் களம் அடைந்த*  மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. (2)   

மன்னு மதுரை தொடக்கமாக*  வண் துவராபதிதன் அளவும்* 
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்*  தாழ்குழலாள் துணிந்த துணிவை* 
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை* 
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே*. (2)          

கண்ணன் என்னும் கருந்தெய்வம்*  காட்சிப் பழகிக் கிடப்பேனைப்* 
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்*  புறம் நின்று அழகு பேசாதே* 
பெண்ணின் வருத்தம் அறியாத*  பெருமான் அரையிற் பீதக- 
வண்ண ஆடை கொண்டு*  என்னை வாட்டம் தணிய வீசீரே* (2)     

அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை* 
வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை* 
வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்* 
சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2)  

பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்* 
இட்டீறு இட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?* 
இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீர் ஊட்டி* 
விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*. (2)

மாதவன் என் மணியினை*  வலையிற் பிழைத்த பன்றி போல்* 
ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 
பீதகஆடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்* 
வீதி ஆர வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)    

நாட்டைப் படை என்று அயன் முதலாத்*  தந்த நளிர் மா மலர் உந்தி* 
வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன்தன்னைக் கண்டீரே?* 
காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய* 
வேட்டையாடி வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)

பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்* 
பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்* 
மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* 
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)