விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
  இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 
  கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
  பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

துடி கொள் நுண் இடை - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும்
சுரிகுழல் - சுருண்ட கூந்தலையும்
துளங்கு எயிறு - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய்
இள கொடி திறத்து - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக,
ஆயர் - இடையர்களுடையவையாய்

விளக்க உரை

நுண்ணிய இடையையும், கரிய கூந்தலையும் உடைய நப்பின்னையை அடைய, இடியென முழங்கிய ஏழு எருதுகளை அடக்கிய கண்ண பெருமான் வாழும் இடம் திருப்பிரிது. இந்த இடத்தில் அழகிய பாறைகளின் மீது மணம்மிகு வேங்கைமலர்ப் படுக்கையில், ஆண் யானை தன் பெண் யானையுடன் படுத்துறங்கும். வண்டுகள் ரீங்காரம் செய்து இசைபாடும். . மனமே நீ அந்த இடத்தை(இந்த திவ்வியதேசம் திருப்பிரிதி) அடைவாயாக.

English Translation

Dumb-bell waisted Lady, curly-haired and pearly-smiling tender Nappinnai Dame, --For her sake he subdued seven mighty bulls in fight, who’s Resident of Himavan peaks. On the flowery cushion showered by the fragrant Kongai over a gem-rocky bed, Making elephant-pairs sleep to the hum of bees in piriti, --O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்