விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கையினார்*  சுரி சங்கனல் ஆழியர்,*  நீள்வரை போல்-
  மெய்யனார்*  துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
  ஐயனார்,*  அணிஅரங்கனார்*  அரவின் அணைமிசை மேய மாயனார்,*
  செய்ய வாய் ஐயோ!*  என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுரி சங்கு - சுரியையுடைய திருச்சங்கையும்;
அனல் ஆழியர் - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்;
மெய்யனார் - திருமேனியையுடையராய்;
கமழ் - பரிமளியாநின்றுள்ள;
சிந்தை - நெஞ்சை;
 

விளக்க உரை

திருக்கையில் சங்கு சக்கரங்களை ஏந்தியவராய், பெரிய மலை போன்ற திருமேனியைஉடையவராய், துளசி மணம் கமழும்நீள்முடிஉடையவராய், எமக்குத்தலைவராய், அணியரங்கனாய்அரவில்பள்ளிகொண்டிருக்கும்எம்பெருமானுடையதிருவாயானது தம் நெஞ்சை கொள்ளை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

English Translation

He wields the discus and conch in his hands. His body is like a dark mountain. He is my master with a tall crown wafting the fragrance of Tulasi. He is the wonder-Lord of Arangam reclining on a serpent bed. Aho, his red lips have won my heart over!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்