- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பாரமாய* பழவினை பற்றுஅறுத்து,* என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்* வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,* திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே*
காணொளி
பதவுரை
பாரம் ஆய - பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற;
பழ வினை - அநாதியான பாபங்களின்;
பற்று அறுத்து - சம்பந்தத்தைத் தொலைத்து;
வைத்தது அன்றி;
கோரம் - மா தவம் உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை;
விளக்க உரை
இந்த பாசுரத்திலேதிருமார்பின்அழகைக் கண்டு ஆனந்திக்கிறார். அவனுடைய திருமார்பானதுஆழ்வாரை எப்படி ஆட்படுத்திக் கொண்டது என்பதை உணர்த்தும்பாசுரமாக அமைந்த பாசுரம் ஆகும். “என்னுடைய பழைய வினைகளை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில்தொலைத்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அவனுக்கு ஆட்படுத்தியும், என்னுள் புகுந்து தங்கியும் விட்டான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்”.
English Translation
Relieving me of my load of misdeeds, the Lord of Arangam made me his devotee; and what is more, he entered into me. What great penance did I do, I do not know. O, His’ auspicious garland-chest has possessed me!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்