விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
  விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
  நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
  கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமலன் -  பரிசுத்தனாய்;
பிரான் -  உபகாரகனாய்;
அடியார்க்கு - (தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு;
விமலன் -  சிறந்தபுகரையுடையனாய்;
நீள் மதிள் -  உயர்ந்த மதிள்களையுடைய;
 

விளக்க உரை

• இந்த பாசுரத்திலே வரும் அமலன், விமலன், நிமலன் மற்றும் நின்மலன் ஆகிய வார்த்தைகளின் பொருள் ஒன்றே ஆகும், ஆனால் தாத்பர்ய பேதம் மட்டுமே கொள்ள வேணும்.

 

• எம்பெருமான் பரிசுத்தன் ஆகையாலே, தாழ்ந்தவரான தாம் அரங்கன்சந்நிதிக்குள்நுழைந்தால்எம்பெருமானுக்கு குறைவு வந்து விடும் என்று நினைத்தாராம், ஆனால் எம்பெருமானுக்கோஎந்தவித குறையும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்தவரான ஆழ்வார் அமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

 

• தன் சிறுமையைப்பாராமல், தன்னை அடியாருக்கு ஆட்படுத்திய பேரொளியைக் கண்டு அனுபவித்து விமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

 

• பிரமன், சிவன் முதலியவர்களும் அஞ்சி அணுகவேண்டிய ஐஸ்வர்யம் மிகுந்திருந்தும், அடியாருக்குஎளியவனாய் இருக்கும் தன்மையை அறிந்து நிமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

 

• அடியாருடைய குற்றங்களைக் கண்டு அவற்றை போக்யமாகக் கொள்ளும் எம்பெருமானைநின்மலன் என்கிறார்.

 

• தூய்மையுடையவனாய், ஜகத்காரணபூதனாய், உபகாரகனாய், தாழ்ந்தவனான என்னை அடியாருக்குஆட்படுத்தியவனாய், திவ்யதேஜசைஉடையவனாய், நித்யசூரிகளுக்கு தலைவனாய், பரிமளம் மிக்க சோலைகளையுடைய திருவேங்கடமலை மீதுதங்கியவனாய், ஆஸ்ரிதபாரதந்த்ரனாய், அடியாருடைய குற்றங்களைக் காணாதவனாய், பரமபதத்துக்கு நிர்வாஹனாய், உயர்ந்த மதிள்களையுடைய கோயிலிலே கண்வளர்ந்தருளும் அழகிய மணவாளனுடைய திருவடித்தாமரைகள், தானே வந்து அடியேனுடைய கண்களில் புகுந்ததுபோலே இருக்கின்றன என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

உரை:1

 

உரை:2

பெருமானின் பேரழகில் ஈடுபட்டுப் பாதாதிகேச வருணனையாகப் பாடியுள்ளார். பாதாதிகேச வருணனை என்பது அடிமுதல் முடிவரை உள்ள இறைவனின் அங்கங்களைச் சிறப்பித்துப் பாடுதல் ஆகும்.

 

 

English Translation

English Meaning:- The perfect-first-Lord is the radiant king of the celestials and resident of Venkatam surrounded by fragrant groves. His golden rule is just and blemish less. He made me a slave of his devotees. He is the Lord of Arangam surrounded by lofty walls. O, his auspicious lotus feet have come to stay in my eyes!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்