விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
    துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
    தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
    அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புனல் சூழ் - திருக்காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா - ஸ்ரீ ரங்கத்தில் கண்வளர்ந்தருளுமவனே!
கடி - பரிமளமுடைய
கமலம் மலர்கள் - தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன - (நன்றாக) மலர்ந்துவிட்டன;

விளக்க உரை

திருக்காவேரியாலேசூழப்பட்டதிருவரங்கத்திலேகண்வளர்ந்துஅருளும்அரங்கனே! பரிமளம் மிக்க தாமரைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. தாமரையைமலரச் செய்யும் கதிரவனும்தோன்றிவிட்டான். மாதர்கள் தம் குழலைப் பிழிந்து உதறிவிட்டு அவரவர்களுடையஆடைகளை அணிந்து கொண்டுகரையேறிவிட்டார்கள். பூக்குடலையும்தோளுமாக வந்து நிற்கும் அடியனை(தாசனை) அங்கீகரித்தருளிஅத்தாணிச் சேவகம் பண்ணிக்கொண்டிருக்கும்பாகவதர்களின்திருவடிகளில் ஆளாக்க தேவரீர் எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அடியேனதுசிற்றறிவுக்குஎட்டினஅளவிலேஎழுதியுள்ளேன். உரையில் குறை இருக்குமாயின்அடியேனைத்திருத்திப்பணிகொள்ளுமாறுபெரியோர்களைப்பிரார்த்திக்கிறேன்.

English Translation

See the lotus blooms in profusion. The Sun has risen from the sea. Slender-hipped dames with curly locks come out of the river drying their hair and squeeze-drying their clothes. O Lord of Arangam surrounded by Kaveri waters, you have graced this lowly serf, Tondaradippodi – bearer of flower-basket, with service to devotees. O Lord wake up!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்