விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
  எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
  விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
  அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குண திசை மாருதம் - கீழ்காற்றானது
கொழு கொடி - செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின் - முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர் - அழகிய மலர்களை
அணலி - அளைந்து கொண்டு

விளக்க உரை

காற்றானதுமுல்லைச்செடியில் உள்ள மலர்களைச் சூழ்ந்து கொண்டுவீசா நின்றது. புஷ்பங்களிலேசயனிக்கும்பறவைகளானது பனி நிறைந்த தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக்கொண்டு உறக்கம் களைந்து எழுந்து ஆயிற்று. முதலையின் பெரிய வாயிலுள்ளபற்களாலேகடிபட்டு, அம்முதலையின்பல்விஷத்தாலே மிகவும் நோவுபட்டகஜேந்திரஆழ்வானுடையதுக்கத்தைபோக்கிஅருளியஅரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில் ஆழ்வார்.

English Translation

The Eastern wind blows softly over blossoms of Mullai wafting their fragrance everywhere. The swan Pair nesting among lotus blossoms have woken up flapping their wings wet with dew. O Lord of Arangam who saved the mighty, elephant Gajendra from the death-like jaws of the crocodile! Pray wake up.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்