விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
    குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*

    முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
    அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடிமையில் - (உனக்குக்) கைங்கரியம் செய்வதில்;
குடிமை இல்லா - உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத;
அயல் - (அடிமைக்கு) அயலான;
சதுப்பேதிமாரில் - நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்;
குடிமையில் கடைமைபட்ட - குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்);

விளக்க உரை

மேன்மைக்குக் காரணம் -எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று. அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பு அன்று, ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க. குடிமை-குடிப்பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம். அயலாதலாவது ‘எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை. அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள் நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

English Translation

O Tulasi-wreathed Lord with lotus feet! Rather than a life of high birth and Vedic proficiency bereft of the spirit of service, you are pleased with a life of devotion, -- even if it be from one born of the lowest rungs of the society. O Lord of Arangama-nagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்