விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
    ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*

    காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
    சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே - காவிரி சூழ்ந்த கோயிலிலே கண்வளர்ந்தருளுமவனே;
மேம்பொருள் - (ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை;
போக விட்டு - வாஸகையோடு விட்டிட்டு;
மெய்ம்மையை - ஆத்மஸ்வரூபத்தை;
மிக உணர்ந்து - உள்ளபடி அறிந்து;

விளக்க உரை

“அளியனம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே “இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும் அதற்காக நம் கைபார்த்திருப்பதும் அதுக்குமேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே! இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய், அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார், “பெருமானே! தேவரீரைக்கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

English Translation

O Lord, surrounded by waters! There are those who subdue the senses, cut attachments, concentrate on the spirit, and realize the truth. There are others who shaved their heads, and live at your portals as idlers. Are you not pleased with both?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்