விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்*   மொடுமொடு விரைந்து ஓடப்* 
  பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்*  பெயர்ந்து அடியிடுவது போல்* 
   பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்*   பலதேவன் என்னும்* 
  தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன்னே
நல் - அழகிய
ஓர் - ஒப்பற்ற
வெள்ளி பெருமலை - பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன் - குட்டி

விளக்க உரை

பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலையீன்ற குட்டியோடுவதையும், கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார். காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க. நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக்காட்டிற்று. அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால், அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம். மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்

English Translation

Like a boulder from a white mountain rumbling down with great speed and a boulder from a black mountain rolling behind it, a big brother called Baladeva, praised by the world without end, runs swiftly and the younger brother follows. Is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்