விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
    கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*
    தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
    சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலை - சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர் - நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகிநின்ற - நீச தர்மமாயிராநின்ற
புத்தொடு சமணம் - பௌத்தமதம்   க்ஷபணமதம் முதலிய
எல்லாம் - எல்லா மதங்களையம்
 

விளக்க உரை

‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும், “புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது; அன்றியும் “தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவதுதென்று தெரியவில்லை; நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்; எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித்தருகிறார். புத்தொடு - புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது. சமணம் -க்ஷபணகருடைய மதம். கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் . “ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள்; அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

English Translation

The tenets of all the lowly, heretic cults – will the learned men of Sastras hear or see these? See, O Sirs! Even if you cut my head, I will not die, I swear. The Lord who destroyed Lanka with a bow, alone is Lord of all.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்