விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
    நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
    மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
    ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூ உலகு - எல்லா வுலகங்களையும்
உண்டு  - (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த - (பிரளயம் நீங்கினபிறகு அவற்றை வெளிப்படுத்திய
முதல்வ - ஜகத்காரணபூதனே
ஆவலிப்புடைமை - செருக்கினாலே
 

விளக்க உரை

உரை:1

அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே! உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ? அஹஹ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை அவற்றின் ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி இத்தனை நாளாக இவற்றை அமுக்கி, ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு, நரகபாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியாநின்றேன்; எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்.

உரை:2

எல்லாவுலகங்களையும் (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து (பிரளயம் நீங்கினபிறகு) அவற்றை வெளிப்படுத்திய ஜகத்காரணபூதனே அரங்கமாநகரளானே உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான செருக்கினாலே பஞ்சேந்திரியங்களையும் வெளியில் ஓடாதபடி அடைத்து பாபராசியை வெகுதூரம் உதறித்தள்ளி ஜயகோஷம் செய்து யமபடர்களின்  தலைமேல் அடியிட்டுத் திரிகின்றோம்.

English Translation

O First-Lord who makes and swallows the three worlds! By the impetus of learning your names, freed of senses, overcoming the pall, we exult, stepping on the heads of Yama’s agents.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்