விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முத்திறத்து வாணியத்து* இரண்டிலொன்றும் நீசர்கள்,* 
  மத்தராய் மயங்குகின்றது*  இட்டதில் இறந்தபோந்து,*
  எத்திறத்தும் உய்வதோர்*  உபாயமில்லை உய்குறில்,* 
  தொத்துறத்த தண்டுழாய்*  நன்மாலை வாழ்த்தி வாழ்மினோ

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மூத்திறந்து - மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில் - (ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும் - விருப்பமுடையரான
நீசர்கள் - நீசரான மனிசர்கள்
அதில் இட்டு - அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து

விளக்க உரை

ஸம்ஸாரிகள் ஸத்வ குணமொன்றையே மேற்கொள்ளாமல் ரஜஸ் தமோகுணங்களுக்கும் வசப்பட்டிருப்பதால் அக்குணங்கட்குத் தகுதியான ராஜஸ தேவதைகளையும் அவர்கள் ஆச்ரயிக்கக் கூடுமாதலால் அப்படி மதிகெட்டுப்போகாதபடி ஸர்வாதிகனான புனத்துழாய் மாலையானையே ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கச் சொல்லுகிறார். உலகததில் அவரவர்கள் பெறும் பலன்கள் மூன்று வகைப்படும்; ஸாத்வீக தேவதையை ஆச்ரயித்தால் ஸாத்விகபலன் பெறலாகும்; ராஜஸதேவதைகளை ஆச்ரயித்தால் ராஜஸபலன்; தாமஸ தேவதைகளை ஆச்ரயித்தால் தாமஸபலன்; இம்மூவகைப்பட்ட பலன்களினுள் ஸாத்விக பலனைப்பேணாது மற்ற இருவகைப் பயன்களை விரும்பி அவ்வழியிலே ஊன்றித்திரிகின்ற நீச மனிசர்கள் நியத்ஸுகத்தை அடையமாட்டார்கள்; அந்தப் பலன்களைச் சில தேசவிசேஷங்களில் அநுபவிப்பதும் மீண்டும் இவ்வுலகத்திலே பிறந்துழல்வதுமாய் இப்படியே தேஹாத்மாபிமாநிகளாய் நசித்துப்போவர்களேயன்றி எவ்விதத்திலும் உஜ்ஜிவிக்கக் கடமைப்பட்டவர்களல்லர். உஜ்ஜீவிக்க வேண்டில், ஸர்வரக்ஷகனென்னுமிடத்துக்கு ப்ரகாசமாகத் திருத்துழாய் மாலையை யணிந்துள்ள பெருமானைப் பணிந்து வாழ வேண்டும்.

English Translation

Of three Gunas, the one of two that lowly men do take to live, it makes them love the life of pain till death alone is Saviour. There is no easy way to cross the sea of Karma; cross you must, then praise the Lord who wears a wreath of Tulasi on his radiant chest.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்