விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நன்றிருந்து யோகநீதி*  நண்ணுவார்கள் சிந்தையுள்,* 
  சென்றிருந்து தீவினைகள்*  தீர்த்ததேவ தேவனே,*
  குன்றிருந்த மாடநீடு*  பாடகத்து மூரகத்தும்,* 
  நின்றிருந்து வெஃகணைக்*  கிடந்ததென்ன நீர்மையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யோகம் நீதி - யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்  - ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள் - ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து - ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும் - திருவூரகத்திலும்

விளக்க உரை

தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்தசிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்; ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார். ஊரகம் - ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது; பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும். அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம். வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. ** என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி

English Translation

You reside in thoughts of all to take the Yoga path to you. O Lord of Gods, you go to them and clear the path to come to you. O Lord you stand in Padakam, you sit in ancient Urakam, you recline in Vehkanai with mansions all around, O Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்