விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பரந்திட்டு நின்ற*  படுகடல் தன்னை* 
  இரந்திட்ட கைம்மேல்*  எறிதிரை மோதக்* 
  கரந்திட்டு நின்ற*  கடலைக் கலங்கச்* 
  சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
  சார்ங்க விற்கையனே! சப்பாணி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பரந்திட்டு நின்ற - (எல்லைகாண வொண்ணாதபடி) பரவியுள்ள
படுகடல் - ஆழமான  ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட - (வழிவிடுவதற்காகத்)தன்னை  யாசித்த
கைமேல் - கையின்மேலே
எறிதிரை - வீசுகின்ற அலைகளினால்

விளக்க உரை

சக்ரவர்த்தித்திருமகன் வாநர ஸேனைகளுடன் புறப்பட்டுப் போய்க் கடற்கரையை அடைந்து ‘லங்கைக்குப் போக வழிவிட வேணும்’ என்று கடலரசனாகிய வருணனை வேண்டி, அங்கு தர்ப்பசயகத்தில் படுத்து ப்ராயோபவேசமாகப் பலநாள் கிடக்கவும் வருணதேவன் பெருமாள் பெருமையை இறையேனுமறியாமல் தன்னைச் சரணம் புகுந்த அவன் கைமேல் அலைமோதும்படி அநாதரித்திருக்க பெருமாள் சீறி அக்கடலை வற்றுவிப்பதற்காக ஆக்நேயாஸ்த்ரத்தைத் தனது அம்பொன்றிலே தொடுத்துவிடத் தொடங்கவே ஸமுத்ரராஜன் கொதிப்படைந்து அஞ்சியோடிவந்து பெருமாளைச் சரணமடைந்து கடல் வடிவமான தன் மேல் அணைகட்டும்படி ஒடுங்கி நின்றனனென்ற வரலாறு இங்கு உணரத்தக்கது. ‘பரந்திட்டு’ ‘இரந்திட்டு’ ‘கரந்திட்டு’ என்ற மூன்றிடங்களிலும் இடு - துணைவினை. படு -(சதகம் முதலியவை) உண்டாகின்ற என்றுமாம். எறிதிரை - வினைத்தொகை. கடலை - ஐகாரம் - அசை; இனி உருபுமயக்கமாகக் கொண்டு கடல்மேல் என்றுரைத்து ‘கடலைச்சுரந்தொட்ட’ என்று இயைப்பினுமாம். ‘கடல் கலங்க’ என்றிருந்தால் தளை தட்டுமென்க.

English Translation

These are the hands rained arrows that shook the ocean-Lord Varuna when he hid in the deep and refused to part or give way. Clap Chappani. O, Lord who wields the Sarnga bow, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்