விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெஞ்சினத்த வேழவெண்*  மருப்புஒசித்து உருத்தமா,* 
  கஞ்சனைக் கடிந்து*  மண்அளந்துகொண்ட காலனே,*
  வஞ்சனத்து வந்த பேய்ச்சி*  ஆவி பாலுள் வாங்கினாய்,* 
  அஞ்சனத்த வண்ணன்ஆய*  ஆதிதேவன் அல்லையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெம்சினந்த - உக்ரமான கோபத்தையுடைய
வேழம் - குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு - வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து - ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த - கோபிஷ்டனாயும்

விளக்க உரை

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும், அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும் ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.

English Translation

O Lord with feet that took the Earth, O Lord who broke the tusker tooth! O Lord who killed the anger king, -- the Kamsa-Lord who meant you harm! O Lord who sucked the poison breast of Putana and took her life! O lord who came as cowherd lad, o Lord of gods of darkest hue!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்