விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெற்புஎடுத்து வேலைநீர்*  கலக்கினாய் அதுஅன்றியும்,* 
  வெற்புஎடுத்து வேலைநீர்*  வரம்புகட்டி வேலை சூழ்,*
  வெற்புஎடுத்த இஞ்சிசூழ்*  இலங்கை கட்டழித்த நீ,* 
  வெற்புஎடுத்து மாரிகாத்த*  மேக வண்ணன் அல்லையே!    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெற்பு எடுத்து - மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர் - கடல் நீரை
கலக்கினாய் - கலங்கச் செய்தாய்
அது அன்றியும் - அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து - மலைகளைக்கொண்டு

விளக்க உரை

முதலடியில்,வெற்பு- மந்தரமலை, இரண்டாமடியில்,வெற்பு = பலவகை மலைகள்; கண்டமலையுங்கொண்டன்றோ அணைக்கட்டிற்று. மூன்றாமடியில்,வெற்பு= த்ரிகூட பர்வதம். நான்காமடியில் வெற்பு = கோவர்த்தனமலை.

English Translation

You pulled a rocky mountain high to churn the Milky Ocean-deep. You built a rocky mountain bridge across the Lanka, ocean-deep. You crossed a rocky mountain wall surrounded by the ocean-deep. You held a rocky mountain high O Lord of hue like ocean-deep!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்