விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்* 
    பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து* 
    சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல் - கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலையுடைய;
கைகேசி - கைகேயியினது ;
சொல்லால் - சொல்லின்படி;
தொல் நகரம் துறந்து - தொன்றுதொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக கைவிட்டு ;
துறை கங்கை தன்னை - கங்கையின் துறையை;

விளக்க உரை

ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப் பிற்பட்டார் கேட்டு அநுபவிக்கப் பெறுவதேயன்றித் தாம்கண்டு அநுபவிக்க பெறாமல் கண்விடாய்த்து நிற்கிற குறைதீர எக்காலத்திலு முள்ளார் அநுபிவக்கைக்காக அங்ஙனமே தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கின்றனன் என்பது பின்னடிகளின் உட்கோள்.

English Translation

He renounced kingship by the words of the flower-coiffured Kaikeyi, he crossed the Ganga with the help of the devoted boatman Guha. In the deep forest, he gave his sandals and the kingdom to Bharata, and lived in Chitrakuta; today he resides in Tillainagar Tiruchitrakutam. Devotees throng to see and enjoy him there. Even the gods are no match to them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்