விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி* 
  மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்* 
  செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* 
  அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி - செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து;
வரு குருதி பொழிதர - ரத்தம் வெளிவந்து சொரியம் படி;
வல் கணை ஒன்று ஏவி - வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி;
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து - எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து;
வல் அரக்கர் - (அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய;

விளக்க உரை

விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும்பொருட்டு தசரத சக்கரவர்த்தியினிடம் அநுமதி பெற்று இராமபிரானை இளையபெருமாளுடன் அழைத்துக்கொண்டு போனபொழுது அம்முனிவ னாச்ரமத்திற்குச் செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர்செய்து கொன்றது மன்றி, பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்குவிளைக்க வந்த ஸுபாஹூ முதலிய பல அரக்கர்களையுங் கொன்று மாரீசனை வாயவ்யாஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு யாகத்தை நிறைவேற்றுவித்தனன் என வரலாறு அறிக. (அந்தணர்கள் ஒரு மூவாயிரவர்.) நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் என்ற ப்ரஸித்தி காண்க. மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காயசோதித், தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரக்கூடஞ்சென்று சேர்மின்களே என்றார் திருமங்கையாழ்வாரும்.

English Translation

Light of the world shining from the good city of Ayodya surrounded by lofty walls! Beacon of the lineage of kings, of the Solar Race! Hero and savior of all the celestials! Lord of lotus eyes and dark frame! Our very own Lord without a peer! He resides in the good Chitrakuta of Tillainagar. When, O when will my eyes feast on his form? ????? ????? mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter Visitors Counter

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்