விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்*  தம்பியையும் பூவை போலும்* 
    மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்*  மருகியையும் வனத்திற் போக்கி* 
    நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு*  என்னையும் நீள் வானில் போக்க* 
    என் பெற்றாய்? கைகேசி*  இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைகேசீ - கைகேயியே;
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும் - கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின் கீழேயிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்;
தம்பியையும் - (அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்;
பூவை போலும் - (பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்;
மின் பற்றா நுண்மருங்குல் மெல் இயல்என் மருகியையும் - மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும் மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்;

விளக்க உரை

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு, மாடல்ல மற்றையவை” என்றபடி கல்வி அழிவில்லாத சிறப்புடைய செல்வமாதலால் அக்கல்வியைப் பூர்ணமாகப் பெற்ற வஸிஷ்டர் முதலிய உபாத்தியாயார்களைப் பொன் பெற்றார் என்றார். பரதன் அந்நாட்டில்லாமல் மாதாமஹனைக் காணும் பொருட்டு மாமனுடைய கேகய தேசத்துக்குச் சென்றிருக்கையில் இங்குக் கைகேயி செய்த முயற்சி பரதனுக்குத் தெரியாததும் தெரிந்தவளவில் மிக்க வருத்தத்தை தருவதுமாயினும் கைகேயி தன் மகனுக்காகச் செய்த முயற்சியில் அவள் மகனும் சம்பந்தபட்டவனென்று உலகத்தார் ஸந்தேஹித்து நினைப்பதற்கு இடங்கொடுத்தலால் நின்பற்றா நின்மகன் மேல் பழி விளைத்திட்டு எனப்பட்டது. உன் மகனுக்கு அநுகூலமாக நீ செய்த காரியம் அந்த உன் காதல்மகனுக்கே சாச்வதமான பெரும்பழியை விளைத்துத் தீமையாய் முடிந்ததே என்று எடுத்துக்காட்டியபடி. தசரதன் இங்ஙனம் தனக்கும் தன் அருமை மகனான இராமனுக்கும் பெருந்தீங்கு செய்த கைகேயியின் வயிற்றிற் பிறந்தவனென்ற காரணத்தாலே பரதனிடத்துக் கொண்ட உபேக்ஷையினால் அவனை நின்மகன் என்றான். மருகி-மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு நீ என்ன திறமைபெற்றாய் எனினுமாம். இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே. ஸம்ஸாரஸுகமாகிறது, புத்ரர்களோடு பார்த்தாவோடும் கூடியிருக்கையாய்த்து உனக்குப் புத்ரரான பெருமாளைக் காட்டிலோபோக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே ஸம்ஸாரஸுகம் அழகிதாக அனுபவிக்கக் கடவையிறே என்ற வியாக்கியானஸூக்தி காண்க. ஸ்ரீராமவிரஹத்தால் உலகமெல்லாம் வருந்திக்கிடக்கையில் நீ ஒருத்திமாத்திரம் மனமகிழ்நதிருக்கின்றனையே, இது என்ன அழகு! என்க.

English Translation

O Kaikeyi! You sent away a son who was the very essence of the Vedas, along with his brother and my slim daughter-in-law into the forest. You have earned a lasting blame for your son. Now you are dispatching me to my abode in the sky! What have you gained? Alas! You still live in sweet pleasure!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்