விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்*  மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி* 
  முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்*  பொலியும் நீர்-முகிற் குழவியே போல* 
  அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்*  அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த* 
  கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ*  கேசவா கெடுவேன் கெடுவேனே  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வடிகொள் - கூர்மையை யுடைத்தாய்;
அஞ்சனம் எழுது - மையிடப்பெற்றதாய்;
செம்மலர் - செந்தாமரை மலரை ஒத்ததான
கண் - கண்களாலே;
மேல் ஒன்றினை - மேற்கட்டியிலே தொடங்கவிட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை;

விளக்க உரை

தாயாயிருந்து தாலாட்டும் பாக்கியத்தை மாத்திரமேயோ நானிழந்ததது? நீ தொட்டிலிற் சாய்ந்திருக்குமழகை ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே; அவர்களில் ஒருத்தியா யிருந்தாகிலும் நான் அவ்வழகைக் காணப்பெற்றேனோ? அக்கேடுமில்லையே! என்கிறாள். குழந்தைகள் தொட்டிலில் கிடக்கும்போது இருக்கக்கூடிய இயல்வைச் சொல்வன மூவடிகளும். குழந்தைகள் தொட்டிலில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு கிடக்குமாதலால் வேறு நினைவின்றி மேலே உற்றுநோக்குத்தற்காகத் தொட்டிலின் மீது கிளிச்சட்டம் தொங்கவிட்டு வைப்பர்கள்; அதில் மிக அழகான ஒரு வஸ்துவை உற்றுநோக்கிக் கொண்டு களித்திருத்தல் குழந்தைகளின் இயல்பு; அதனைக் கூறுவது முதலடி. தொட்டிலில் கிடக்கும் விதம் சொல்லுகிறது மேல். மேல்புறம் கறுத்து உட்புறம் சிவந்துள்ள திருவடிகளை முடக்கிக்கொண்டும், கைவிரல்களை முடக்கிக்கொண்டும், ‘மேகக்குட்டி கிடக்கிறதோ! ஆனைக்குட்டி கிடக்கிறதோ!’ என்று விகற்பிக்கலாம்படியாக நீ தொட்டிலில் சாய்ந்திருக்கும் போதை யழகை அநுபவிக்கப் பெறாது இழந்தேனே.

English Translation

O Kesava, I must be the worst of all mothers. Alas, I do not have the good fortune of seeing you lie in the cradle like a supine baby elephant, --your sharp lotus-eyes lined with collyrium, your intent gaze fixed on something in the ceiling your bent knees displaying.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்