விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னை வருக எனக் குறித்திட்டு*  இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்* 
    மன்னி அவளைப் புணரப் புக்கு*  மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்* 
    பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்*  பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்*
    இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்*  வருதியேல் என் சினம் தீர்வன் நானே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புணர புக்கு  - ஸம்ச்லேஷிக்கப் போய்;
வருக என - (இன்னவிடத்திற்கு) வாவென்று;
குறித்திட்டு - ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு;
இனம் மலர் முல்லையின் பந்தர்நீழல் - நிறைந்த மலர்களையுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே;
மன்னியவளை - (வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை;

விளக்க உரை

[என்சினம் தீர்வன்நானே] என்கிறவிடத்தைக் கோயிலில் திருவத்யயநோத்ஸவதத்தில் ”உய்ந்த பிள்ளை” என்பாரொரு அரையர் அபிநயிக்கும்போது, கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பதுமாய் அபிநயித்தார். அதாவது, - மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும் என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்பதாகக் கருத்தை விரித்தார். அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ஙனே அரையர்காட்டிய அபிநயத்தைக் கடாக்ஷித்து அரையர்க்கு ராஸிக்யம் போராதென்று திருவுள்ளம் பற்றி, ” கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் என்றிருக்கிற கண்ணனுக்கு அது வருத்தமோ! வேப்பிலையுருண்டையோ? இது அவனுக்கு “*******” மாகுமன்றோ ஆகையால் அதுவன்று கருத்து; முகங்கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்னுங் கருத்துத் தோன்ற, கையிட்டு முகத்தை மறைத்துத் திரியவைத்தருளிக் காட்ட வேணுமென்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்று ப்ரஸித்தம்.

English Translation

O Lord who prefers the serpent-couch! We are not the girls of those old times, nor are we your favored ones with dark eyes that match the bumble-bees. Pray stop coming to our place at odd hours. Infatuated by your beautiful clothes, auspicious face, coral lips and; dark curls, we were taken in by your lies. One day is enough! No more of your stories, Sir, please go!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்