விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்*  வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*  ஒருங்கு- 
  ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை*  ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!* 
  முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்*  முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய* 
  அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வார் குழல் - நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார் - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே
வைத்தன - சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து - மத்தாலே
அளவும் - அளாவிக்கடைகைக்கு உரிய

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் சேர்த்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியில் வாரி உட்கொண்டதற்காக யசோதையினால் ஓருரலோடே பிணித்துக் கட்டப்பட்டு அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து சென்ற கண்ணபிரான் இரட்டை மருதமரங்களினிடையே போனபோது அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்து அவற்றில் ஆவேசித்திருந்த அசுரர்களும் உருமாய்ந்தொழிந்தனர் என்பது முன்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டகதை. நிளகூபரன் மணிக்ரீவர் என்னும் குபேர புத்திரரிருவர் முன்பொரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்திரீகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரிடை செய்து கொண்டிருக்கையில் நாரதமுனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க இந்த மைந்தர் மாத்திரம் மதுபான மயக்கத்தால் வஸ்திரமில்லாமலேயிருக்க நாரதர்கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க உடனே அவர்கள் வணங்கி வேண்டிக்கொண்டதற்கு இரங்கி நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களருகில் வருஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம் பெற்று மீள்வீர் என்று சாபவிடை கூறிப்போயினர். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அசுரர்களும் ஆவேசித்திருந்தனரென்பதும் சில புராணங்களில் உள்ளது. “ஒருங்கொத்த விணைமருத முன்னியவந்தவரை” என்று இவ்விடத்திலும் பொய்ம்மாயமருதான அசுரரை என்றுமேல் ­மூன்றாம்பத்திலும் இவ்வாழ்வாரருளிச் செய்வனவுங் காண்க. ஊரு, காம் - வடசொற்கள். பருவம் ஏறினால் புன்சிரிப்பு முற்றிப் பெருஞ்சிரிப்பாக மாறிவிடுமாதலால் “முத்தினிளமுறுவல் முற்ற வருவதன்முன்” என்றார். ‘பற்கள்’ என்றாவது முத்துப்போன்ற பற்கள் என்றாவது சொல்லவேண்டுமிடத்து முத்து என்றே இங்குச் சொல்லியிருப்பது - உவமையாகு பெயர்.

English Translation

O, Mighty Lord! In stealth you are the curds, butter and Ghee painstakingly churned by the beautiful long -haired cowherd-dames. Then with mighty limbs you felled the twin Marudu trees that meant you harm! With a smile displaying half sprouted teeth on your beautiful face, tossing about your dark curly locks, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்