விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
    செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*
    மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
    மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொய் - க்ருத்ரிமமாய்;
சிலைகுரல் - கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான;
ஏறு - (ஏழு) ரிஷபங்களின்;;
எருத்தம் இறுத்து - முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன் - போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்தஸ்வாமியாய்;

விளக்க உரை

அடியார்களை ஆட்கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற காளமேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப்பெற்று எப்போதும் மயிர்க்கூச்செறியும் திருமேனியையுடயரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து, அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார். “திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு. “மனம் மெய்சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படாநின்ற தென்றபடி.

English Translation

The Lord of Arangam is surrounded by high masonry walls that radiate his aura. He killed seven charging bulls and battled with a terrible serpent. He is like a rainbow - adorned dark cloud. Those who contemplate him in their hearts, experience horripilation. When my heart goes out to these devotees, I too experience horripilation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்