விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
  ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*
  நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
  ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தோய்த்த தண் தயிர் - தோய்த்த தண் தயிர்;
வெண்ணெய் - வெண்ணையையும் பாலையும்;
பால் - பாலையும்;
உடன் உண்டலும் - ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்;
ஆய்ச்சி - யசோதைப்பிராட்டியானவனள்;

விளக்க உரை

“எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே!” என்று நம்மாழ்வார் ஆறுமாதம் மோஹித்துக்கிடக்கும்படி மயக்கவல்ல கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட அபதாநத்தை அநுஸந்தித்து, “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன்-அணியரங்கன்” என்றபடி ஸ்ரீரங்கநாதனை அக்கண்ணபிரானாகப் பாவித்துப் பணிசெய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பேன் நான் என்கிறார்.

English Translation

My Lord of Arangam gulped curds, butter, and milk; he was caught by Yasoda who bound him by his hands. His devotees in ecstasy call, “Narayana!” till their tongues swell and fall at his feet again and again with folded hands, till their bodies swell. My heart shall always worship and praise the holy feet of these devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்