விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
  துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*
  அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து - கொடுமையால் விளங்காநின்றுள்ள மனத்தை ஒழித்து;
வஞ்சம் மாற்றி - வஞ்சனைகளைப் போக்கி;
வல் புலன்கள் அடக்கி - கொடிய இந்திரியங்களை அடக்கி;
இடர் பாரம் துன்பம் துறந்து - (மேன்மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்;

விளக்க உரை

முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன. “திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து, விளாங்காநின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம். முறம்-கொலை, கோபம், கொடுமை. இடர்ப்பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை. மஹத்தான துக்கத்தை விளைவிக்கக்கூடியதும், மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச்சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.

English Translation

The beautiful Lord reclines on a serpent-bed in Arangam between the loins of Ponni, the Kaveri-Kollidam Rivers. He is the sole refuge of devotees whose hearts are filled with compassion and who practice with unshakeable faith the eternal Dharma. Dispensing with avarice, cleansing the vice in their hearts, and subduing their senses, they perform worship five times daily and rid themselves of their painful load of Karma. O. when will I stand in their midst, and offer worship with tears brimming in my eyes?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்