விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்* 
    பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்* 
    மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* 
    பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரு தாள் களிற்றுக்கு - பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த - க்ருபைபண்ணின
பரமன் தன்னை - திருமாலை
பாரின் மேல் - இந்நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப்பற்றி
 

விளக்க உரை

பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த ( முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட யானை , வெகு நேரம் போராடி இறுதி நேரத்தில் திருமாலை அழைக்கின்றது.. உடனே  யானைக்கு அருள புவி வருகிறார் திருமால்..அதனைத் துன்பத்தில் இருந்து விடுவித்து   காப்பாற்றி அருள்கிறார்..வைகுந்தம் புகுன்றது திருமாலின் அருள் பெற்ற யானை.. உலகத் துன்பங்களில் எல்லாம் உழன்றாலும் அவன் திருவடிகளை அடைக்கலம் புகும் பொழுது அவன் வந்து காத்து அருள்வான் என்ற நம்பிக்கையை மகள் கோதைக்குக் கொடுத்தவர் பெரியாழ்வார்.

English Translation

These are words by Vishnuchitta’s daughter Goda, of seeing on Earth in Brindavana the cosmic lord who saved the elephant. Those who keep it in their hearts as remedy for life’s ills will forever be inseparable from the feet of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்