விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தருமம் அறியாக் குறும்பனைத்*  தன் கைச் சார்ங்கம் அதுவே போல்* 
  புருவ வட்டம் அழகிய*  பொருத்தம் இலியைக் கண்டீரே?* 
  உருவு கரிதாய் முகம் சேய்தாய்*  உதயப் பருப்பதத்தின்மேல்* 
  விரியும் கதிரே போல்வானை*  விருந்தாவனத்தே கண்டோமே*            

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தருமம் அறியா - இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை - குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல் - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப்போன்ற
புருவவட்டம் - திருப்புருவ வட்டங்களாலே
அழகிய - அழகுபெற்றவனாய்

விளக்க உரை

உரை:1

தயையென்கிற தர்மத்தை ஈஷத்தும் அறியாதவனாய், குறும்பு செய்வதையே தொழிலாகக்கொண்டவனாய், தன்கையிலுள்ள சார்ங்க வில்போன்று வட்டமாய் அழகியதான திருப்புருவங்களை யுடையவனாய், உதந்தாரோடே பொருந்திவாழப் பெறாதவனான பெருமானைக கண்டதுண்டோ? உண்டு, கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படி இருண்டவ்வையுடையனாய், செந்தாமரைபோற் சிவநத திருமுகமண்டலத்தை யுடையவனாய், உதய பர்வதத்தின்மேலே ஆதித்யன் உதிக்கும்போதுள்ள ப்ரபாவிசேஷத்தையுடையனான கண்ணபிரானை விருந்தாவனத்திலே கண்டோம். (தர்மம்) என்றும் வடசொல் தரும்மெனத் திரிந்தது. “ஆந்ரு சம்ஸ்யம் பரோ தரம்“ என்று பிறர் பக்கல் இரக்கமே பரம தர்மமாகச் சொல்லுகையாலே அப்படிப்பட்ட இரக்கமில்லாதவனென்று ஊடல் தலையெடுத்துச் சொல்லுகிறபடி.

உரை:2

நியாயம் என்பது அறியாத குறும்பனைத்தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல்புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா ? உருவம் கருமையாக முகம் செம்மையாய்
மலையின் மீது விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே.

English Translation

“The unruly rogue has curved eyebrows, like the Sarnga bow he wields. Did you see the Lord of inconsistencies?” “His body dark, his face red, he looked like the rising Sun over the Eastern mount. We saw him then in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்