விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாதவன் என் மணியினை*  வலையிற் பிழைத்த பன்றி போல்* 
    ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 
    பீதகஆடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்* 
    வீதி ஆர வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பீதகம் ஆடை - திருப்பதாம்பரமாகிற
உடை - திருப்பரிவட்டமானது
தாழ - தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல் வீதி ஆரவருவானை - பெருத்துக்கறுத்துதொரு மேகக்குட்டிபோலே
வீதி ஆர வருவானை - திருவீதி நிறைய எழுந்தருளும் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்)

விளக்க உரை

உரை:1

திருமகள் கொழுநனாய், எனக்கு நீலமணிபோலே அனுபாவ்யனாய், வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றிபோல் செருக்கி ஒருவர் கைக்கும் பிடிகொடாதவனான பெருமானைக் கண்டதுண்டோ? உண்டு, திருவரையில் பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்துகொண்டு காளமேகக்குட்டியிபோல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம். “மாதவனென் மணியினை” என்று ப்ரதீகமெடுத்து -“தன்னுடைய ரஸிசுத்வம் எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யனாயிருக்கிறவனை” என்று தாத்பர்ய மருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளத்தின் ஆழத்தை என் சொல்வோம்!. “சுவையன் திருவின்மணாளன்“ என்ற திருவாய்மொழியை அடியொற்றி மாதவனென்பதற்கு ரஸிகனென்றே பொருள்கொண்டார், ஒரு சிறந்த மணியானது பெருவிலையுடைத்தாயிருப்பினும் துணியின் தலைப்பில் முடிந்தாளலாம்படி கைச்சரக்காயிருக்குமென்பது திருவுற்றம்பற்றி என்மணியினை என்பதற்கு “எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யன்“ எனப்பொருள் கொண்டார். இனி ஸமபிவ்யாஹார ஸித்தமான தாத்பர்ய விசேஷத்தைப் பரமபோய்கமாக அருளிச்செய்தார்.

உரை:2

மாதவன் என் மணியினை வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் நாம்  கொள்ள , கைக்குப் பிடி தாராமல் செல்லும் இறைவனைக் கண்டீர்களா ? தனது மஞ்சள்  பட்டாடை தாழப் பெரும் கார் மேகக் கன்று போல வீதியில் நிறைந்து வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.

English Translation

“Utterly invincible as a boar-escaped-from-the-dragnet, did you see my black-gem Lord Madavan?” “Like temple’s stud-bull-calf taken around the precincts, his yellow robes all hanging, we saw him in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்