விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
  ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 
  மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
  மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏலாபொய்கள் உரைப்பானை - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ணபிரானை (இங்கே போதக் கண்டீரே?
மேலால் - மேலே
பரந்த - பரவின
வெயில் - வெய்யிலே
காப்பான் - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக

விளக்க உரை

பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி. வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும், அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் - முன்னடிகள். மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ் விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் - பின்னடிகள். ஏலாப் பொய்களுரைப்பானை - “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘ என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின். “***“ (கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா? மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந) என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.

English Translation

“The Lord is a lover, nay; love itself born as a bridegroom. Did you see the inept liar go this way?” “Under the wings of Garuda, like a canopy shielding him from the Sun, we saw him going in Brindavana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்