விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொம்மை முலைகள் இடர் தீரக்*  கோவிந்தற்கு ஓர் குற்றேவல்* 
  இம்மைப் பிறவி செய்யாதே*  இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?* 
  செம்மை உடைய திருமார்வில்*  சேர்த்தானேனும் ஒரு ஞான்று* 
  மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி*  விடைதான் தருமேல் மிக நன்றே*    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சேர்த்தானேலும் - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
கன்று - (நல்லது)
இம்மைப்பிறவி செய்யாதே இனி போய் - இந்த ஜன்மத்திலே செய்யப்பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேசவிசேஷத்திலே போய்
செய்யும் - செய்யக்கூடியதான
தவந்தான் ஏன்? - தபஸ்ஸு ஏதுக்கு?

விளக்க உரை

உரை:1

கொங்கைதன்னைக் கிழங்கோடு மள்ளிப் பறித்திடுவானேன்? விழங்கு என்றி ஆத்மவஸ்துவுண்டாகில் அவ்வாத்மவங்துதான் நித்யமாகையாலே ஒரு காலவிசேஷத்திலே ஒரு தேசவிசேஷத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறலாமே, அவ்வநுபவத்தைப் பெறுவதற்குப் பாரித்துக்கொண்டு இங்கே ஒருவாறு ஆறியிருக்கலாமே“ என்று சிலர்சொல்ல, பெற்ற இவ்வுடம்போடே இங்கே அநுபவிக்க ஆவல் கொண்டிராநின்றநான் தேஹாந்தரத்திலும் தேசாந்தரத்திலும் நேருவதொரு பேற்றைத் துப்புவேனோ வென்கிறாள். க்ஷாமகாலத்திலே சோறு சோறு என்று கதறும் ப்ரஜைகளைப்போலே “எமக்குவகுத்த விஷயத்தைக்காட்டு, எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு“ என்று நெருக்குகின்ற இம்முலைகளின் பசிதீரும்படி இந்தப்பிறவியிலே இத்தஸரீரத்தோடே கோபாலக்ருஷ்ணனுக்குக் கைங்கர்யம்பண்ணாமல் வேறொரு பரபுருஷனுக்கு பண்ணுவதொரு கைங்கரியமுண்டோ? என்கிறாள் முன்னடிகளில்.

உரை:2

'வளர்ந்த குழந்தைகளைப் போன்ற இந்த முலைகளின் இடர் தீர கோவிந்தனுக்கு ஒரு குற்றேவல் இந்தப் பிறவியிலேயே செய்யாமல் மறுபிறவியில் வைகுந்தம் சென்று அவனுக்குக் குற்றேவல் செய்யும் தவம் செய்து என்ன பயன்? சிறந்த அவனுடைய திருமார்பகத்தில் என் முலைகளை அவன் சேர்க்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது 'நான் உன்னை காதலிக்கவில்லை' என்ற உண்மையாவது என் முகத்தை நோக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அது மிக நல்லதாக இருக்கும்'

English Translation

If I cannot, in this life, serve my Govinda and satisfy my swollen breasts, what great purpose awaits me in the life hereafter? Good if he will brace me to his beautiful chest now. Or else let him face and answer me one day.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்